பதிப்பு:v20241231

Xiaomi தனியுரிமைக் கொள்கை

எங்கள் தனியுரிமைக் கொள்கை 15 ஜனவரி 2021 அன்று புதுப்பிக்கப்பட்டது.

எங்கள் தனியுரிமை நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள சிறிது நேரம் ஒதுக்கி, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அறிமுகம்

Xiaomi Technologies Singapore Pte. Ltd., Xiaomi Technology Netherlands B.V., மற்றும் Xiaomi குழுமத்திற்குள் உள்ள அதன் கூட்டு நிறுவனங்கள் ( விரிவான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்) (இதன் பிறகு, இவை மொத்தமாக "Xiaomi", "நாங்கள்", "எங்கள்" அல்லது "எமது" என்று குறிப்பிடப்படும்) உங்கள் தனியுரிமையை தீவிரமாக எடுத்துக் கொள்கின்றன. இந்த தனியுரிமைக் கொள்கை உங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் தனிப்பட்ட தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டு நடைமுறைகள் குறித்த விரிவான புரிதல் உங்களுக்கு இருப்பது முக்கியம். அதே நேரத்தில், Xiaomi -க்கு வழங்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்கிறது என்பதை உறுதிசெய்கிறீர்கள்.

தனியுரிமைக் கொள்கை - அறிமுகம்

குறிப்பிட்ட Xiaomi தயாரிப்புகள் அல்லது தனிப்பட்ட தனியுரிமைக் கொள்கையை வழங்கும் சேவைகளைத் தவிர, இந்த தனியுரிமைக் கொள்கையை குறிக்கும் அல்லது இணைக்கும் அனைத்து Xiaomi தயாரிப்புகள், இணையதளங்கள் அல்லது செயலிகளுக்கு இந்த தனியுரிமைக் கொள்கை பொருந்தும். நீங்கள் எங்களுக்கு வழங்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் அல்லது (https://www.mi.com, https://en.miui.com, https://account.xiaomi.com) என்ற வலைதளங்களில் அணுக முடியக்கூடிய தயாரிப்புகளையும் சேவைகளையும் உபயோகிக்கும் போது உங்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்களையும், எங்கள் மொபைல் சாதனங்களில் நாங்கள் வழங்கும் எங்கள் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்களையும் Xiaomi எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது, செயலாக்குகிறது மற்றும் பாதுகாக்கிறது என்பதை இந்த தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. ஒரு Xiaomi தயாரிப்பு தனியான ஒரு தனியுரிமைக் கொள்கையை வழங்கினால், அந்தத் தனியான தனியுரிமைக் கொள்கை முன்னுரிமை பயன்பாட்டைப் பெறும். அதே சமயம் அதில் குறிப்பாக உள்ளடங்காத ஏதேனும் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரித்துச் செயலாக்குகின்றன என்பது, மாடல், சேவைப் பதிப்பு அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். கூடுதல் விவரங்களுக்குத் தனியான தனியுரிமைக் கொள்கையை நீங்கள் பார்க்க வேண்டும்.

இந்த தனியுரிமைக் கொள்கையின் கீழ், “தனிப்பட்ட தகவல்” என்பது ஒரு தனிப்பட்ட நபரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அடையாளம் காணப் பயன்படும் தகவல் ஆகும். இது அந்தத் தகவலில் இருந்து மட்டுமே அல்லது Xiaomi அந்தத் தனிநபரைப் பற்றிய அணுகலைக் கொண்டுள்ள பிற தகவல்களுடன் இணைக்கப்பட்டோ அடையாளப் பயன்படலாம், இதில் உங்கள் பிராந்தியத்தில் பொருந்தக்கூடிய சட்டங்களில் குறிப்பாக வழங்கப்பட்டவை உள்ளடங்காது. தனியுரிமைக் கொள்கைக்கு கண்டிப்புடன் இணங்கி உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவோம். சூழலால் கோரப்படும்போது, பொருந்தக் கூடிய சட்டங்களால் வகைப்படுத்தப்படும் போது தனிப்பட்ட தகவல்களில், முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்களும் உள்ளடங்கலாம்.

உங்களுக்கு நாங்கள் எவ்வாறு உதவ முடியும்

இறுதியாக, நாங்கள் எங்களுடைய எல்லா பயனர்களுக்கும் மிகச்சிறந்ததையே விரும்புகிறோம். இந்த தனியுரிமைக் கொள்கையில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான எங்களுடைய தரவு கையாளும் நடைமுறைகளில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து உங்கள் குறிப்பிட்ட சந்தேகங்களுக்கு தீர்வு காண https://privacy.mi.com/support மூலமாகத் தொடர்பு கொள்ளவும். உங்களின் கருத்தைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைவோம்.

1. எந்தெந்தத் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம் மற்றும் அவற்றை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம்?

1.1 நாங்கள் சேகரிக்கும் தகவல்

எங்கள் சேவைகளைத் தங்களுக்கு வழங்கத்தேவையான தனி நபர் தகவல்களை வழங்குமாறு நாங்கள் உங்களைக் கேட்போம். தகவல்களை அவற்றின் குறிப்பிடப்பட்ட, உறுதியான, வெளிப்படையான மற்றும் நேர்மையான நோக்கங்களுக்கு மட்டுமே தேவையான தகவல்களைச் சேகரிப்போம். மேலும் அந்த நோக்கங்களுக்கு இணக்கமற்ற வகையில் மேற்கொண்டு அவற்றைச் செயலாக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயல்வோம். நாங்கள் கோரிய தகவல்களை வழங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் வழங்காவிட்டால், எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நாங்கள் உங்களுக்கு வழங்கவோ அல்லது உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ முடியாமல் போகலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேவையைப் பொறுத்து, நாங்கள் பின்வரும் வகைப்பட்ட தகவல்களைச் சேகரிப்போம்:

1.1.1 நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்

நீங்கள் தேர்வு செய்யும் சேவைக்கு அவசியமான, நீங்கள் எங்களுக்கு வழங்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் நாங்கள் சேகரிக்கக்கூடும். உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் பெயர், மொபைல் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சேர்ப்பித்தலுக்கான முகவரி, ஆணைத்தகவல்கள், விலைப்பட்டியலிடும் விபரங்கள், வங்கிக் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவர் பெயர், கிரெடிட் கார்டு எண், மற்றும் நீங்கள் mi.com சில்லறை விற்பனைச் சேவைகளை உபயோகிப்பவர் என்றால் பிற தகவல்களை தாங்கள் வழங்கலாம்; Xiaomi Cloud சேவைகளைத் தாங்கள் உபயோகிப்பவர் என்றால், பொருட்கள் மற்றும் தரவுகளை நீங்கள் ஒருமிப்பு செய்யலாம்; நீங்கள் ஒரு கணக்கைத் துவங்கினால், உங்கள் பாலினம், பத்திரப்படுத்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் இதர தகவல்களை நீங்கள் வழங்கலாம்; நீங்கள் விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டால், உங்கள் புனை பெயர், மின்னஞ்சல் முகவரி, புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது தேவையான பிற தகவல்களை எங்களுக்கு வழங்கலாம்; நீங்கள் எங்களுடனோ, எங்கள் பொருளடக்கம் அல்லது எங்கள் சந்தைப்படுத்தலிலோ ஈடுபட்டால் அல்லது பரிசு வென்றால் உங்கள் பெயர், மொபைல் தொலைபேசி எண் மற்றும் முகவரியை வழங்கலாம்

1.1.2 சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது நாங்கள் சேகரிக்கும் தகவல்

• சாதனம் அல்லது சிம் தொடர்பான தகவல்கள். உதாரணத்திற்கு, IMEI/OAID, GAID எண், IMSI எண், MAC முகவரி, வரிசை எண், சிஸ்டம் பதிப்பு எண் மற்றும் வகை, ROM பதிப்பு எண், Android பதிப்பு எண், Android ID, ஸ்பேஸ் ID, சிம் கார்டு ஆபரேட்டர் மற்றும் அதன் பிரதேசம், திரையில் காட்சிப்படுத்தும் தகவல்கள், சாதனத்தின் கீபேட் தகவல்கள், சாதனத்தின் தயாரிப்பாளர் தகவல்கள் மற்றும் மாதிரியின் எண், சாதனம் செயல்படத்துவங்கிய நேரம், நெட்வொர்க் ஆபரேட்டர், இணைப்பின் வகை, அடிப்படை வன்பொருள் தகவல்கள், விறபனைச் சேன்னல் மற்றும் உபயோகிப்புத் தகவல்கள் ( CPU, சேமிப்பகம், பேட்டரி உபயோகம், திரையின் ரெசல்யூஷன் மற்றும் சாதனத்தின் வெப்பநிலை, கேமிரா லென்ஸ் மாடல், திரை ஒளிர்விட்டு பூட்டு திறக்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை போன்றவை).

• மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்களால் ஒதுக்கப்பட்டிருக்கக் கூடிய உங்களைப் பற்றிய குறிப்பான தகவல்கள்: மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்களால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக் கூடிய விளம்பர ஐடி போன்ற தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம் மற்றும் பயன்படுத்தலாம்.

• உங்கள் செயலி உபயோகம் தொடர்பான தகவல்கள், ஒரு செயலிக்கான தனித்துவமான அடையாளப்படுத்திகள் உள்பட (உதா., VAID, OAID, AAID, Instance ID) மற்றும் அடிப்படை செயலி தகவல்கள், செயலி பட்டியல், செயலி ID தகவல்கள், SDK பதிப்பு எண், சிஸ்டம் புதுப்பித்தல் அமைப்புக்கள், செயலி அமைப்புக்கள் (பிராந்தியம், மொழி, நேர மண்டலம், எழுத்துரு) போன்றவை, முன்களத்தில் செயலி நுழைகின்ற/வெளியேறுகின்ற நேரம், மற்றும் செயலியின் நிலைமை பதிவேடு (உதா., பதிவிறக்கம் செய்தல், நிறுவுதல், புதுப்பித்தல், அழித்தல்).

• நீங்கள் ஒரு Xiaomi சேவையைப் பயன்படுத்தும்போது உருவாக்கப்படும் தகவல்கள், அதாவது உங்கள் பேட்ஜ்கள், மதிப்பீடுகள், உள்நுழைவு தகவல்கள் மற்றும் Xiaomi சமூகத்தில் உங்கள் உலாவல் பதிவுகள்; Xiaomi சமூகத்தில் உங்கள் செய்திகள் (அனுப்புபவர் பெறுபவர் தரப்புகளுக்கு மட்டுமே தெரியும்); உங்கள் ஆடியோ பிளேபேக் வரலாறு, இசை சேவைகளில் தேடல் வினவல்கள்; உங்கள் விருப்பங்கள், கருத்துகள், பிடித்தவை, பகிர்ந்தவை, தீம் சேவைகளில் உங்கள் தேடல் வினவல்கள்; முறைமை மொழி, நாடு மற்றும் வட்டாரம், நெட்வொர்க் நிலை, செயலி வைப்பகத்தில் உள்ள செயலிகளின் பட்டியல்; உங்கள் பயன்பாட்டு தகவல்கள், இதில் வட்டாரம், IP, தொடர்புடைய பொருளடக்க வழங்குநர், வால்பேப்பர் மாற்றும் கால இடைவெளி, படங்களின் பார்வைகள், படங்களைப் பார்க்கும் கால அளவு, கிளிக்குகள் மற்றும் கட்டுரைகளைக் காண்பது, Wallpaper வரிசையில் சந்தாக்கள் போன்றவையும் உள்ளடங்கும்.

• இருப்பிடத் தகவல் (குறிப்பிட்ட சேவைகள்/அம்சங்களுக்கு மட்டுமே): இருப்பிடம் தொடர்பான சேவைகளை (வழிசெலுத்தும் மென்பொருள், வானிலை மென்பொருள் மற்றும் சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்டறியும் செயல்பாடுடைய மென்பொருள்) நீங்கள் பயன்படுத்தினால் உங்களுடைய துல்லியமான அல்லது தோராயமான இருப்பிடம் தொடர்பான பல்வேறு வகையான தகவல்கள். பிராந்தியம், தேசக் குறியீடு, நகரக் குறியீடு, மொபைல் நெட்வொர்க் குறியீடு, மொபைல் தேசக் குறியீடு, செல் அடையாளம், தீர்க்கரேகை / அட்சரேகை தகவல், நேர மண்டல அமைப்புகள், மொழி அமைப்புகள் போன்றவை இந்தத் தகவல்களில் உள்ளடங்கலாம். அமைப்பில் வைத்து எந்த வேளையிலும் அமைவிட தகவல்களின் அணுகலுக்கு தனித்தனி செயலிகளை கட்டுப்படுத்தாலாம்> Apps > Permissions > Permissions > Location.

• பதிவுத் தகவல்கள்: நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட செயல்பாடுகள், செயலிகள் மற்றும் இணையதளங்கள் தொடர்பான தகவல்கள். இது குக்கீகள் மற்றும் பிற அடையாளங்காட்டி தொழில்நுட்பங்கள், ஐபி முகவரிகள், நெட்வொர்க் கோரிக்கை தகவல், தற்காலிக செய்தி வரலாறு, இயல்பான முறைமை பதிவுகள், செயலிழப்பு தகவல், சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் (பதிவு நேரம், அணுகல் நேரம், செயல்பாட்டு நேரம் போன்றவை) உருவாக்கப்பட்ட பதிவுத் தகவல் ஆகியவற்றை உள்ளடக்கலாம்.

• மற்ற தகவல்கள்: சுற்றுச்சூழல் குணாம்ச மதிப்பு (ECV) (அதாவது, Xiaomi கணக்கு ஐடி, சாதன ஐடி, இணைக்கப்பட்ட Wi-Fi ஐடி மற்றும் இருப்பிடத் தகவல் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட மதிப்பு).

1.1.3 மூன்றாம் தரப்பு மூலங்கள் வழங்கும் தகவல்கள்

சட்டத்தால் அனுமதிக்கப்படுகையில், உங்களைப் பற்றிய தகவலை மூன்றாம் தரப்பு மூலங்களிடம் இருந்து சேகரிப்போம். உதாரணத்திற்கு:

• உங்கள் அங்கீகரிப்பு தேவைப்படும் கணக்கு மற்றும் நிதித் தொடர்பான பரிவர்த்தனைகளை உள்ளடக்கும் சில குறிப்பிட்ட சேவைகள், பாதுகாப்பை வழங்குவதற்கும் மோசடியைத் தடுக்கும் நோக்கத்திற்காகவும் முறையான மூன்றாம் தரப்பு மூலங்கள் மூலம் நீங்கள் வழங்கிய தகவல்களை (ஃபோன் எண் போன்றவற்றை) நாங்கள் சரிபார்ப்போம்;

• விளம்பரப்படுத்தல் மாதிரி இயன்றவரையாக்குதல் நியமனம் பெற்ற தனித்துவமான அடையாளம் காட்டிகள் (விளம்பர ந்றுவனங்கள் மூலமாக பெறப்பட்ட IMEI/OAID/GAID போன்றவை) மூலமாக செயலாக்கம் செய்யப்படுகிறது மற்றும், சில சூழ்நிலைகளின் கீழாக, விளம்பரப்படுத்தல் சேவைகளை வழங்குவதற்காக, உங்களின் விளம்பரப்படுத்தல் சேவைகளை நீங்கள் உபயோகிப்பதற்கு நிகரான அந்தந்த மாற்றுதல் செயல்திறன் தரவுகளும் (க்ளிக்குகள் போன்றவை) கூட பகுதியளவுக்கு உபயோகிக்கப்படும்.

• கணக்கு ID, புனை பெயர், சுயவிபர புகைப்படம், மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற சில குறிப்பிட்ட தகவல்களையும் கூட நாங்கள் மூன்றாம் தரப்பினரிடமிருந்து நாங்கள் பெறக்கூடும் (உதா., Xiaomi சேவையில் நீங்கள் உள்நுழைய நீங்கள் ஒரு சமூக நெட்வொர்க் கணக்கை உபயோகிக்கும்போது).

mi.com சேவைகள் மூலம் உங்களுக்காகப் பொருட்களை வாங்கும்போது மற்றொரு பயனர் எங்களுக்கு வழங்கக்கூடிய உங்கள் டெலிவரி முகவரி போன்ற பிறர் எங்களுக்கு வழங்கும் உங்களைப் பற்றிய தகவல்கள்

1.1.4 தனிப்பட்ட முறையில் அடையாளம் காண இயலாத தகவல்

ஒரு தனிநபருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில்லாத பிற தகவல்களையும் நாங்கள் சேகரிக்கக் கூடும், மேலும் இவ்வகையான தகவல்கள் பொருந்தும் உள்ளூர் சட்டங்களின்படி தனிப்பட்ட தகவலாக வரையறுக்கப்படாமல் இருக்கலாம். இதுபோன்ற தகவல்கள் தனிப்பட்ட முறையில் அடையாளங்காட்டாத தகவல்கள் என்று அழைக்கப்படும். தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டாத தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம், பயன்படுத்தலாம் மற்றும் வெளிப்படுத்தலாம். நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தனிப்பட்ட வகையில் அடையாளம் காண முடியாத தொகுக்கப்பட்ட வடிவமைப்பில் பயன்படுத்துவோம் என்பதைப் பற்றிய சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு, :

• நீங்கள் ஒரு குறிப்பிட்ட சேவையைப் பயன்படுத்தும்போது உருவாக்கப்பட்ட புள்ளிவிவரத் தரவுகள் இந்தத் தகவலில் அடங்கலாம் (எ.கா. அடையாளம் காண முடியாத சாதனம் தொடர்பான தகவல்கள், தினசரி உபயோகம், பக்க வருகைகள், பக்க அணுகல் காலஅளவு மற்றும் அமர்வு நிகழ்வுகள்);;

• நெட்வொர்க் கண்காணிப்பு தரவு (எ.கா. கோரிக்கை நேரம், கோரிக்கைகளின் எண்ணிக்கை அல்லது பிழை கோரிக்கைகள் போன்றவை);

• செயலி செயலிழப்பு நிகழ்வுகள் (எ.கா. செயலி செயலிழந்தவுடன் தானாக உருவாக்கப்படும் பதிவுகள் போன்றவை).

உங்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்துவதற்கு இதுபோன்று சேகரிக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே சேகரித்த தகவலின் வகை மற்றும் அளவு இருக்கும்.

உங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கவும், எங்கள் இணையதளங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் எந்தெந்த பகுதிகளில் நீங்கள் அதிகம் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தத் தகவதகளைத் திரட்டுகிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு நாளில் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையை நாம் அறிய வேண்டியிருக்கலாம், ஆனாலும் அந்த நாளில் யார் செயல்பாட்டில் உள்ளார் என்பதை அறிய வேண்டிய அவசியமில்லை, அவ்வாறாகவே புள்ளிவிவர பகுப்பாய்வுக்குத் திரட்டப்பட்ட தரவுகளே போதுமானவயாகும். தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டாத தகவலில் இருந்து உங்கள் தனிப்பட்ட தரவை பிரிப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம், அந்த இரு வகை தரவும் தனித்தனியே பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவோம். ஆனாலும், நாங்கள் தனிப்பட்ட வகையில் அடையாளம் காட்டாத தகவல்களைத் தனிப்பட்ட தரவுடன் ஒன்றிணைத்தால், அதுபோன்ற பிணைக்கப்பட்ட தகவல்கள் அவ்வாறு பிணைக்கப்பட்ட நிலையில் உள்ள வரை தனிப்பட்ட தகவல்களாகக் கருதப்படும்.

1.2 நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்

தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை வழங்கவும், மற்றும் பொருந்தும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் தேவைப்படும் மற்ற ஒழுங்குமுறை தேவைப்பாடுகளுக்கு நாங்கள் இணங்கி நடக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவுமே தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம். இதில்:

• டெலிவரி, செயல்படுத்தல், சரிபார்ப்பு, விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விளம்பரம் போன்ற எங்கள் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை, உங்களுக்கு வழங்குதல், செயலாக்குதல், பராமரித்தல், மேம்படுத்துதல் மற்றும் உருவாக்குதல்.

• இழப்பு மற்றும் மோசடியைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பான நடைமுறைகளைச் செயல்படுத்தி பராமரித்தல், பயனர்களை அடையாளம் காண உதவுவது, பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது போன்ற செயல்களை மேற்கொள்ளுதல். பின்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே உங்களது தகவல்களை மோசடி எதிர்ப்பிற்காக பயன்படுத்துவோம்: உண்மையாகவே தேவைப்படும்போது; பயனர்கள் மற்றும் சேவைகளைப் பாதுகாக்க Xiaomi இன் நியாயமான நோக்கங்களுடன் இணங்கியபடி அந்தத் தரவுகள் மதிப்பீடு செய்யப்பட பயன்படுத்தப்பட்டால்.

• சாதனங்கள் மற்றும் சேவைகள் பற்றிய உங்கள் கேள்விகள் அல்லது கோரிக்கைகளை கையாளுதல், வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலளித்தல், முறைமை மற்றும் செயலி அறிவிப்புகளை அனுப்புதல், (அதிர்ஷடக் குலுக்கல் போன்ற) உங்களது செயல்பாடுகளை நிர்வகித்தல் போன்றவை.

• தொடர்புடைய விளம்பர நடவடிக்கைகளை நடத்துதல், அதாவது சந்தைப்படுத்தல், விளம்பர உள்ளடக்கம் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குதல். குறிப்பிட்ட வகையான விளம்பர உள்ளடக்கத்தை நீங்கள் ஒரு நேரத்திற்கு பிறகு பெற விரும்பவில்லை என்றால், பொருத்தக் கூடிய சட்டங்களின் கீழ் வேறு வகையில் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, நீங்கள் செய்தியில் தரப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றி, (அதாவது, செய்தியின் அடிப்பகுதியில் தரப்பட்டுள்ள குழுவிலகு இணைப்பு போன்றவை) அதிலிருந்து விலகி கொள்ளலாம். கீழே, "உங்கள் உரிமைகள்" என்பதையும் பார்க்கவும்.

• அகத் தேவைகள், தரவு மதிப்பாய்வுகள், ஆய்வு மற்றும் எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை இன்னும் சிறப்பாக மேம்படுத்த எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரத் தகவல்களை உருவாக்குதல். எடுத்துக்காட்டாக, இயந்திரக் கற்றல் அல்லது மாடல் அல்காரிதம் பயிற்சியானது அடையாளம் நீக்குதல் செயலாக்கத்திற்குப் பிறகு செய்யப்படும்.

• உங்கள் சாதனத்தின் செயல்திறனை மேம்படுத்தல், உங்கள் நினைவகப் பயன்பாடு அல்லது உங்கள் செயலியின் CPU பயன்பாட்டை ஆய்வு செய்தல் போன்றவை.

• எங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்காக உங்களுடன் தொடர்புடைய தகவல்களைச் சேமித்து வைத்தல் மற்றும் பராமரித்தல் (வணிக புள்ளிவிவரங்கள் போன்றவை) அல்லது சட்ட ரீதியான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக.

• Xiaomi -இன் சட்டப்படியான நலன்கள் அடிப்படையிலான செயலாக்கம் (பொருந்தக் கூடிய சட்ட வரம்புகளில், எடுத்துக்காட்டாக GDPR). சட்டப்பூர்வமான நலன்கள் என்பவற்றில், எங்கள் வர்த்தகத்தை இன்னும் திறம்பட நிர்வகிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் எங்களுக்கு உதவுபவை; இது எங்கள் வர்த்தகங்கள், முறைமைகள், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியவற்றின் பாதுகாவலைக் காப்பவை (இதில் லாபம் இழப்பைத் தடுப்பது, மோசடியைத் தடுப்பது போன்றவையும் உள்ளடங்கும்); உள்ளக நிர்வகம்; உள்ளக கொள்கைகள் மற்றும் செயல்முறைகளுடன் இணங்கி நடப்பது மற்றும் இந்தக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ள பிற சட்டப்பூர்வ நலன்கள் ஆகியவை உள்ளடங்கும்.

எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், எங்கள் செயலிகளின் செயல்திறனை மேற்கொண்டு புரிந்துகொள்ளவும், உங்கள் உபயோகத்தின் அடிக்கடி தன்மை, செயலிழப்பு பதிவு பற்றிய தகவல்கள், ஒட்டுமொத்த உபயோகம், செயல்திறன் தரவுகள் மற்றும் செயலிக்கான ஆதாரம் போன்ற தொடர்புடைய தகவல்களை நாங்கள் பதிவு செய்யக் கூடும். அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் சாதனங்களைத் திறப்பதைத் தடுப்பதற்காக, Xiaomi கணக்கு ஐடி, வரிசை எண் மற்றும் இயக்கப்படும் கணினியின் IP முகவரி மற்றும் உங்கள் மொபைல் சாதனத்தின் வரிசை எண் மற்றும் சாதனம்பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கக் கூடும்.

• உள்ளகச் சேவைகளை வழங்குதல், உங்கள் சாதனத்தில் குறிப்புகள் சேவையைப் பயன்படுத்துவது போன்ற, எங்கள் சர்வர்களுடன் தகவல்பரிமாற்றம் தேவைப்படாதவை.

• உங்கள் அனுமதியுடன் மற்ற நோக்கங்களுக்கும்.

உங்கள் தகவலை (இது தனிப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கலாம்) எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றிய இன்னும் விரிவான எடுத்துக்காட்டுகள் இங்கே தரப்பட்டுள்ளன:

• நீங்கள் வாங்கிய Xiaomi தயாரிப்புகள் அல்லது சேவைகளை செயல்படுத்துதல் மற்றும் பதிவு செய்தல்.

• உங்கள் Xiaomi கணக்கை உருவாக்குதல் மற்றும் பேணி வருதல்Account. எங்கள் வலைத்தளங்களில் அல்லது எங்கள் மொபைல் சாதனங்கள்மூலம் நீங்கள் Xiaomi கணக்கை உருவாக்கும்போது சேகரிக்கப்படும் தனி நபர் தகவல்கள் உங்களுக்கான தனி நபர் Xiaomi கணக்கு மற்றும் சுயவிவரப் பக்கத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

• உங்கள் வாங்குதல் ஆர்டர்களை செயலாக்குதல். வாங்குதல் ஆர்டரை செயலாக்கவும், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் மறு-டெலிவரி உள்ளடக்கிய விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கவும், மின் வணிக ஆர்டர்கள் தொடர்பான தகவல்கள். மேலும், ஆர்டர் எண் டெலிவரி கூட்டாளருடன் ஆர்டரை சரிபார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மேலும் பார்சல் டெலிவரியைப் பதிவுசெய்வதற்காகவும் பயன்படுத்தப்படும். பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் அஞ்சல் குறியீடு போன்ற பெறுநர் விவரங்கள் டெலிவரி நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். மின்னஞ்சல் முகவரியானது பயனருக்கு பார்சல் தடமறிதல் விவரங்களை அனுப்பப் பயன்படுத்தப்படுகிறது. வாங்கிய பொருட்களின் பட்டியல், இன்வாய்ஸ் அச்சிடுவதற்கும், பார்சலில் என்ன இருக்கிறது என்று பயனர்கள் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

• Xiaomi சமுதாயத்தில் பங்கேற்றல். Xiaomi சமூகம் அல்லது பிற Xiaomi இணைய தளங்கள் தொடர்பான தனி நபர் தகவல்கள் சுயவிவரப் பக்கக் காட்சிப்படுத்தல், பிற பயனர்களுடனான தொடர்புக்கு மற்றும் Xiaomi சமூகத்தில் பங்கேற்பதற்குப் பயன்படுத்தப்படலாம்.

• சிஸ்டம் சேவைகளை வழங்குதல். சிஸ்டம் சேவைகளைச் செயல்படுத்த பின்வரும் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன: GAID எண், IMEI எண், IMSI எண், தொலைபேசி எண், சாதன ஐடி, சாதன இயக்க முறைமை, MAC முகவரி, சாதன வகை, அமைப்பு மற்றும் செயல்திறன் தகவல் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட சாதனம் அல்லது சிம் கார்டு தொடர்பான தகவல்கள் மொபைல் இருக்கும் நாட்டின் குறியீடு, மொபைல் நெட்வொர்க் குறியீடு, இருப்பிட பகுதி குறியீடு மற்றும் செல் அடையாளம் உள்ளிட்ட தகவல்கள்

• செயலாக்குதல் தோல்விகளைக் கண்டறிதல். SIM கார்டு செயலாக்குதல் தோல்வியை (எ.கா. குறுஞ்செய்தி சேவை (SMS) கேட்வே மற்றும் நெட்வொர்க் தோல்விகள்) அணுகுவதற்கு இருப்பிடம் தொடர்பான தகவல் பயன்படுத்தப்படும். சேவையின் நெட்வொர்க் ஆப்பரேட்டரைக் கண்டறிதல் மற்றும் தோல்வியைப் பற்றி அந்த நெட்வொர்க் ஆப்பரேட்டருக்கு அறிவித்தல் போன்றவற்றுக்கு, இருப்பிடம் தொடர்பான தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

• இதர சிஸ்டம் சேவைகளை வழங்குதல். நீங்கள் Xiaomi சிஸ்டம் சேவையைப் பயன்படுத்தும் போது சேகரிக்கப்படும் தகவல்கள், அந்தச் சேவையின் செயல்பாடுகளைச் செய்வதற்கும், கணினிச் சேவைகள் தொடர்பான செயல்பாடுகளைப் பதிவிறக்குதல், புதுப்பித்தல், பதிவு செய்தல், செயல்படுத்துதல் அல்லது இயன்றவரையாக்குதல் போன்ற சேவை இயன்றவரையாக்குதலை வழங்கவும் பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு, கருத்துரு தீம்களால் சேகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்கள், நீங்கள் பதிவிறக்கம் செய்வது மற்றும் உங்களின் உலாவல் வரலாற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட தீம் பரிந்துரை சேவைகளை வழங்கலாம்

• உங்கள் சாதனத்தைக் கண்டறிதல். உங்கள் சாதனம் தொலைந்தாலோ அல்லது திருடு போனாலோ, Xiaomi இன் சாதனத்தைக் கண்டறி வசதி அதைக் கண்டறிந்து மீட்பதற்கு உதவும். உங்கள் சாதனம் இருக்குமிடத் தகவல்களை உபயோகித்து அதன் இருப்பிடத்தை நீங்கள் கண்டுபிடிக்கலாம், எட்ட இருந்து தரவுகளை அழிக்கலாம், அல்லது சாதனத்தைப் பூட்டலாம். சாதனத்தைக் கண்டுபிடி எனும்அம்சத்தைப் பயன்படுத்தும்போது, சாதனத்திலிருந்து இருப்பிடத் தகவல் பிடிக்கப்படும்; சில சூழ்நிலைகளில், இந்தத் தகவல் செல் டவர்கள் அல்லது வைஃபை ஹாட்ஸ்பாட்களிலிருந்து பெறப்படுகிறது. அமைப்புகள் > Xiaomi கணக்கு > Xiaomi கிளவுட் > சாதனத்தைக் கண்டறி என்பதற்குச் சென்று எந்த நேரத்திலும் இந்த அம்சத்தை இயக்கலாம் அல்லது முடக்கலாம்.

• புகைப்படங்களில் அமைவிடத் தகவல்களைப் பதிவு செய்தல். ஒரு புகைப்படத்தை எடுக்கும்போதே உங்கள் அமைவிடத் தகவல்களை நீங்கள் பதிவு செய்யலாம். இந்தத் தகவல்கள் உங்கள் புகைப்படக் கோப்புகளுக்குள்ளாகவே பார்க்கக் கிடைக்கும் மற்றும் உங்கள் புகைப்படங்களின் மெட்டாடாட்டாவில் அந்த இருப்பிடம் சேமிக்கப்படும். ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது உங்கள் இருப்பிடத்தைப் பதிவுசெய்ய நீங்கள் விரும்பவில்லை எனில், சாதனத்தின் கேமரா அமைப்புகளுக்குள் எந்த நேரத்திலும் இதை முடக்கலாம்

• செய்தி அனுப்பும் அமங்களை வழங்குதக் (உதா., Mi Talk, Mi செய்தி). பதிவிறக்கம் செய்து Mi Talk ஐப் பயன்படுத்தினால், Mi Talk இன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் இந்தச் சேவையைச் செயல்படுத்துவதற்காகவும் பயனர் மற்றும் செய்திப் பெறுநரை அடையாளப் படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படலாம். கூடுதலாக, ஒரு பயனர் செயலியை மீண்டும் நிறுவியபிறகு அரட்டை வரலாற்றை மீண்டும் ஏற்றுவதற்கான வசதிக்காகவும், சாதனங்களுக்குச் சாதனம் ஒத்திசைவு ஏற்படவும் அரட்டை வரலாறு சேமிக்கப்படுகிறது. அனுப்புநர் மற்றும் பெறுநரின் தொலைபேசி எண்கள் மற்றும் Mi மெசேஜ் ஐடிகள் போன்ற தகவல்கள் Mi Message க்காகப் பயன்படுத்தப்படலாம், மேலும் இந்தச் சேவையைச் செயல்படுத்தவும், செய்திகளின் ரூட்டிங் உட்பட அதன் அடிப்படை செயல்பாட்டுத் தன்மையை இயக்கவும் பயன்படுத்தப்படலாம்.

• இருப்பிடம்-அடிப்படையிலான சேவைகளை வழங்குதல். Xiaomi சிஸ்டம் சேவைகளை உபயோகிக்கும் போக்கில்,Android தளத்தின் மிகச்சிறந்த சாத்தியமான பயனர் அனுபவத்தைக் கொடுப்பதன் ஒரு அங்கமாக உங்களுக்குச் சேவை அளிக்கவும் அமைவிடம் பற்றிய (காலநில விபரங்கள் போன்ற) துல்லியமான விபரங்களை உங்களுக்கு வழங்குவதற்காகவும், அமைவிடத் தகவல்கள் கூட எங்களாலோ அல்லது மூன்ராம் தரப்பி சேவை வழங்குனராலோ அல்லது வணிகக் கூட்டாளிகளாலோவும் (மேலும் தகவல்களுக்கு, கீழிருக்கும் இதைப் பார்க்கவும் "உங்கள் தனி நபர் தகவல்களை எப்படி நாங்கள் பகிர்கிறோம், இடம் கடத்துகிறோம், மற்றும் பொதுவெளியில் வெளிப்படுத்துகிறோம்" ) கூட உபயோகிக்கப்படலாம். நீங்கள் எந்த வேளையிலும் அமைவிட சேவைகளை அமைப்புக்கள்-இல் சென்று முடக்கலாம் அல்லது தனித்தனி செயலிகளுக்காக அமைவிட சேவைகளை உபயோகிப்பதையும் முடக்கலாம்.

• தரவுகள், வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுப்பாய்வு மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல். பயனர் அனுபவத் திட்டம் போன்ற சில விருப்பத்தேர்வு அம்சங்கள், மொபைல் தொலைபேசி, Xiaomi சிஸ்டம் சேவைகள் மற்றும் வழங்கப்பட்ட பிற சேவைகளை பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய தரவை பகுப்பாய்வு செய்ய Xiaomi ஐ அனுமதிக்கிறது. இதனால் Xiaomi மூலம், செயலிழப்பு அறிக்கைகளை அனுப்புவது போன்ற பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. பயனர் அனுபவத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக Xiaomi வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுப்பாய்வுகளையும் நடத்தும்.

• பத்திரப்படுத்தல் அம்சத்தினை வழங்குதல். பத்திரப்படுத்தல் ஸ்கேன், பேட்டரி சேமிப்பு, தடுப்பு பட்டியல், கிளீனர் போன்ற பத்திரப்படுத்தல் செயலியில் உள்ள பாதுகாப்பு மற்றும் சிஸ்டம் பராமரிப்பு அம்சங்களுக்காக, இப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படலாம். இந்த அம்சங்களில் சில மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும்/அல்லது எங்கள் வணிகக் கூட்டாளர்களால் இயக்கப்படுகின்றன (மேலும் தகவlகளுக்கு, கீழே உள்ள "உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் எவ்வாறு பகிர்கிறோம், பரிமாற்றுகிறோம் மற்றும் பொதுவில் வெளியிடுகிறோம்" என்பதைப் பார்க்கவும்). வைரஸ் விவரணம் கொண்ட பட்டியல்கள் போன்ற தனிநபர் தகவல்கள் அல்லாத தகவல்கள் பத்திரப்படுத்தல் ஸ்கேன் செயல்பாட்டுக்காக உபயோகிக்கப்படுகின்றன.

• புஷ் சேவையை வழங்குதல். Xiaomi கணக்கு ID, GAID, FCM டோக்கன், Android ID, மற்றும் Space ID (இரண்டாவது ஸ்பேஸ் அம்சம் இயக்கப்பட்டிருக்கும் Xiaomi சாதனங்களில் மட்டும்) ஆகியவை Xiaomi புஷ் சேவை மற்றும் Xiaomi அறிவிப்புச் சேவைகளை வழங்கவும், விளம்பர செயல்திறனை மதிப்பீடு செய்யவும், அறிவிப்புகளை அனுப்பவும் பயன்படுத்தப்படும். இதில் மென்பொருள் புதுப்பிப்புகள் அல்லது புதிய தயாரிப்பு அறிவிப்புகள், விற்பனை மற்றும் விளம்பரங்கள் பற்றிய தகவல் உள்ளடங்கும். மேலே உள்ள சேவையை உங்களுக்கு வழங்க, சம்பந்தப்பட்ட செயலி தகவல்கள் (ஆப் பதிப்பு ஐடி, ஆப் பேக்கேஜ் பெயர்) மற்றும் தொடர்புடைய சாதனம்பற்றிய தகவல்கள் (மாடல், பிராண்ட்) ஆகியவையும் சேகரிக்கப்படும். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மற்றும்/அல்லது தேர்ந்தெடுத்த மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சலுகைகள் அல்லது விளம்பரத்தைக் கொண்ட புஷ் சேவைகளை உங்களுக்கு அனுப்பும் நோக்கத்திற்கு (எங்கள் சேவைகளுக்குள்ளே செய்தியிடல், மின்னஞ்சல் அல்லது வேறு வழிமுறைகளில்) உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் உபயோகிக்கலாம். பொருந்தக் கூடிய சட்டங்களின் கீழ் தேவைப்படும்போது, இது உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படும்: அமைப்புகளில் உங்கள் விருப்பங்களை மாற்றுவதன் மூலம் அல்லது Xiaomi புஷ் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலி/இணையதளம் வழியாக உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதன் மூலம் எங்களிடமிருந்தும் மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் மார்க்கெட்டிங் தகவலைப் பெறுவதிலிருந்து நீங்கள் விலகலாம். கீழே, "உங்கள் உரிமைகள்" என்பதையும் பார்க்கவும்.

• பயனர் அடையாளத்தைச் சரிபார்த்தல். பயனர் அடையாளத்தைச் சரிபார்ககவும் அங்கீகாரமற்ற உள்நுழைதலைத் தவிர்க்கவும் ECV ஐ Xiaomi உபயோகிக்கிறது.

• பயனர் பின்னூட்டம் சேகரித்தல். எங்கள் சேவைகளில் மேம்பாடுகள் செய்வதற்கு, நீங்கள் Xiaomi க்கு அளிக்க தேர்வு செய்யும் பின்னூட்டங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. நீங்கள் வழங்குவதற்கு தேர்ந்தெடுத்த பின்னூட்டம் தொடர்பாக, Xiaomi நீங்கள் வழங்கியுள்ள தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம் மற்றும் அந்தத் தகவல்தொடர்பின் பதிவுகளை, சிக்கல் தீர்ப்பு மற்றும் சேவை மேம்படுத்துதலுக்காக வைத்திருக்கலாம்.

• அறிவிப்புகளை அனுப்புதல். அவ்வப்போது, முக்கியமான அறிவிப்புகளை வழங்குவதற்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தலாம், அதாவது, கொள்முதல்கள், எங்கள் விதிமுறைகளில், நிபந்தனைகளில் மற்றும் கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் போன்றவை குறித்த அறிவிப்புகளுக்கு. Xiaomi உடனான உங்கள் பரஸ்பர செயல்பாட்டுக்கு, இது போன்ற தகவல்கள் முக்கியமானவை என்பதால், இந்த அறிவிப்புகளைப் பெறுவதை ஏற்குமாறு நாங்கள் மிக நன்றாகப் பரிந்துரைக்கிறோம்.

• விளம்பர செயல்பாடுகளை மேற்கொள்ளுதல். Xiaomi இன் சமூக ஊடக தளங்கள்மூலம் ஸ்வீப்ஸ்டேக், போட்டி அல்லது அது போன்ற விளம்பரத்தில் நீங்கள் நுழைந்தால், உங்களுக்குப் பரிசுகளை அனுப்ப நீங்கள் வழங்கும் தனிநபர் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.

• விளம்பரங்கள் உள்ளிட்ட தனிப்பயனாக்கிய சேவைகள் மற்றும் உள்ளடக்கத்தை வழங்குதல். உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க, உங்களுக்கு விளம்பரங்கள் உள்ளிட்ட தனிப்பயனாக்கிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளை வழங்குவதற்காக உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது உங்களை நேரடியாக அடையாளம் காட்டும் பிற தகவல்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நாங்கள் ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியைப் பயன்படுத்துகிறோம்.

இந்தத் தகவல்களுடன் பிற தகவல்களையும் (வெவ்வேறு சேவைகள் அல்லது கணினிகள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் பிற இணைக்கப்பட்ட சாதனங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற தகவல்கள்), எங்கள் தயாரிப்புகள், சேவைகள், உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்கவும் மேம்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் இணைத்துப் பயன்படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு, Xiaomi கணக்கு தேவைப்படக்கூடிய நீங்கள் உபயோகிக்கத் தேவைப்படும் அனைத்துச் சேவைகளிலும் உங்கள் Xiaomi கணக்கு விபரங்களை நாங்கள் உபயோகிக்கக்கூடும். இதற்கு மேலும், உங்கள் அனுபவத்தையும் எங்கள் சேவைகளையும் மேம்படுத்த, சம்பந்தப்பட்டசட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணக்கமாக இருக்கவும் மற்றும் (தேவைப்படும் இடங்களில்) உங்கள் ஒப்புதலுடனும், உங்களிடமிருந்து அல்லது உங்களுக்குத் தொடர்புடைய பல்வேறு தயாரிப்புகள், சேவைகள் அல்லது உபகரணங்களிலிருந்து தகவல்களை நாங்கள் வரிசைப்படுத்தலாம். இது ஒரு பெயரட்டை உருவாக்கவும், பரிந்துரைகள், தனிப்பயனாக்கப்பட்ட பொருளடக்கம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களை வழங்கவும் பயன்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக, எங்கள் செயலிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விருப்பங்கள், உங்கள் செயல்பாடுகள், பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் வழங்கப்படும். மேற்கூறிய தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், கூறுகளாகஉருவாக்குவதன் மூலமும் (குறிப்பிட்ட பகிரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட குழுக்கள்) உங்கள் தனிப்பட்ட தகவலை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் வைப்பதன் மூலம் நாங்கள் சுயவிவரங்களை உருவாக்குகிறோம். இலக்கிடப்பட்ட விளம்பரப்படுத்தல் பொருந்தக் கூடிய சட்டங்களின் கீழ் தேவைப்படும்போது, உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படும்: தனிப்படுத்திய விளம்பரங்களைப் பெறுவதில் இருந்து குழுவிலகுவதற்கு உங்களுக்கு உரிமையுண்டு மற்றும் நேரடி சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக செய்யப்படுபவை உள்ளிட்ட சுயவிவரமாக்குதலுக்கு எந்த நேரத்திலும் மறுப்புத் தெரிவிக்கலாம்.

மேற்கூறிய கலப்புக்கான காரணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின் தேவைகளின்படி, அத்தகைய கூறுகளாக்குதல் மற்றும் தனிப்பயனாக்கத்திற்கான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். எங்களிடமிருந்து நேரடி சந்தைப்படுத்தல் செய்யப்படுவதிலிருந்து நீங்கள் விலகவும் மற்றும் தன்னியக்கமான முடிவு மேற்கொள்ளவும் தங்களுக்கு உரிம உண்டு இந்த உரிமைகளைப் பிரயோகப்படுத்த, இந்த அம்சங்களை நீங்கள் எந்த நேரத்திலும் அமைப்புகளில் சென்று > கடவுச்சொற்கள் & பாதுகாப்பு > தனியுரிமை > விளம்பர சேவைகள் அல்லது அமைப்புகள் > கடவுச்சொற்கள் & பாதுகாப்பு > கணினி பாதுகாப்பு > விளம்பரச் சேவைகள் வரிசையில் ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், அல்லது https://privacy.mi.com/support வழியாக எங்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனித்தனி தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு வழிமுறைகளை மேற்கோள் செய்துகொள்ளலாம். கீழே, "உங்கள் உரிமைகள்" என்பதையும் பார்க்கவும்.

2. குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம்

Xiaomi மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களால் குக்கீகள், வெப் பீக்கன்கள் மற்றும் பிக்சல் குறிச்சொற்கள் போன்ற தொழில்நுட்பங்கள் Xiaomi யால் மற்றும் எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களாலும், வணிகக் கூட்டாளிகளாலும் பயன்படுத்தப்படுகின்றன. (மேலும் தகவலுக்கு, கீழே இருக்கின்ற "உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு பகிர்கிறோம், மாற்றுகிறோம், பொதுவில் வெளியிடுகிறோம்" என்பதைப் பார்க்கவும்). போக்குகளைப் பகுப்பாய்வு செய்யவும், தளத்தை நிர்வகிக்கவும், பயனர் இயக்கங்களைத் தடமறியவும், மொத்தமாக எங்கள் பயனர் தளத்தைப் பற்றிய பரவல் தகவல்களைச் சேகரிக்கவும் இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தனிநபர் வாரியாகவும் தொகுப்பு முறையிலும் நாங்கள் அறிக்கைகளைப் பெறக்கூடும். இந்தத் தொழில்நுட்பங்கள் பயனர்களின் நடத்தையை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன, எங்கள் இணையதளங்களில் மக்கள் எந்தப் பிரிவுகளைப் பார்த்துள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கின்றன, அதுமட்டுமல்லாமல் விளம்பரங்கள் மற்றும் இணையத் தேடல்களின் செயல்திறனை எளிதாக்கவும் அளவிடவும் எங்களுக்கு உதவுகின்றன.

• பதிவுக் கோப்புகள்: பெரும்பாலான இணையதளங்களைப் போலவே, நாங்கள் தகவல்களைச் சேகரித்து அவற்றை பதிவுக் கோப்புகளாக சேமித்து வைக்கிறோம். இந்தத் தகவல்களில் IP முகவரி, உலாவி வகை, இணைய சேவை வழங்குநர் (ISP), பரிந்துரைக்கும்/வெளியேறும் பக்கங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம், தேதி/நேர முத்திரை, மற்றும்/அல்லது கிளிக்ஸ்ட்ரீம் தரவு போன்றவையும் உள்ளடங்கலாம். இந்தத் தானாக சேகரிக்கப்பட்ட தரவை உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் மற்ற தகவல்களுடன் ஒன்றாக இணைக்க மாட்டோம்.

• அகச் சேமிப்பிடம் – HTML5/Flash: உள்ளடக்கம் மற்றும் விருப்பத்தேர்வுகள் போன்றவற்றை சேகரித்து வைக்க HTML5 அல்லது Flash போன்ற அக சேமிப்பிட பொருட்கள் (Local Storage Objects - LSOs) போன்றவற்றை நாங்கள் பயன்படுத்துவோம். எங்கள் தளத்தின் குறிப்பிட்ட சில அம்சங்களை வழங்குவதற்காக அல்லது உங்கள் உலாவல் வரலாற்றின் அடிப்படையில் விளம்பரப்படுத்தலைக் காண்பிக்க நாங்கள் கூட்டுசேர்ந்துள்ள மூன்றாம் தரப்பினர்களும் HTML5 அல்லது Flash குக்கீகளைப் பயன்படுத்தி தகவல்களை சேகரிக்கலாம் மற்றும் சேமித்து வைக்கலாம். HTML5 LSOகளை அகற்றுவதற்காக சொந்த நிர்வாகக் கருவிகளை பல்வேறு உலாவிகள் வைத்திருக்கலாம். ஃபிளாஷ் குக்கீகளை நிர்வகிக்க இங்கே கிளிக் செய்யலாம்.

• விளம்பரப்படுத்தல் குக்கீகள்: எங்கள் இணையதளத்தில் விளம்பரத்தைக் காட்ட அல்லது பிற தளங்களில் எங்கள் விளம்பரத்தை நிர்வகிக்க நாங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடனும் வணிகக் கூட்டாளருடனும் (மேலும் தகவலுக்கு, கீழே "உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு பகிர்கிறோம், மாற்றுகிறோம், பொதுவில் வெளியிடுகிறோம்" என்பதைப் பார்க்கவும்) கூட்டு சேர்கிறோம். உங்கள் ஆன்லைன் செயல்பாடுகள் மற்றும் ஆர்வங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காகவும் உங்கள் சுயவிவரம் மற்றும் ஆர்வங்களுடன் மிகவும் அதிகமாகப் பொருந்தும் விளம்பரங்களை உங்களுக்கு வழங்க்குவதற்காகவும் எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வர்த்தகக் கூட்டாளர்கள் விளம்பரப்படுத்தல் குக்கீகளைப் பயன்படுத்தலாம். இந்த விளம்பரப்படுத்தல்களை உங்களுக்கு வழங்குவதற்கு முன்பாக, உங்களிடம் முன்னதாக வெளிப்படையான ஒப்புதலைப் பெறுவோம் மற்றும் அதில் தெளிவான ஒப்புதல் வழங்கும் செயல்பாடு அடங்கியிருக்கும். ஆர்வங்கள் அடிப்படையிலான விளம்பரங்களை உங்களுக்கு வழங்கும் நோக்கத்திற்காக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றுவதன் மூலம் நீங்கள் விலகிக் கொள்ளலாம்.

• மொபைல் Analytics: எங்கள் மொபைல் செயலிகளில் சிலவற்றுக்குள், எங்கள் இணையதளத்தைப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக நாங்கள் Analytics குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் செயலியை எந்த இடைவெளியில் பயன்படுத்துகிறீர்கள், செயலியில் நீங்கள் செய்யும் விஷயங்கள், தொகுக்கப்பட்ட உபயோகம், செயல்திறன் தரவு மற்றும் செயலி எப்போது செயலிழக்கிறது என்பவைப் பற்றிய தகவல்களை இந்த குக்கீகள் சேகரிக்கும். Analytics மென்பொருளுக்குள் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை, மொபைல் செயலிக்குள் நீங்கள் சமர்ப்பிக்கும் வேறு எந்த தனிப்பட்ட தகவல்களுடனும் நாங்கள் இணைக்க மாட்டோம்.

3. உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு பகிர்கிறோம், மாற்றுகிறோம், பொதுவில் வெளியிடுகிறோம்

3.1 பகிர்தல்

மூன்றாம் தரப்பினர்களுக்கு நாங்கள் எந்தத் தனிப்பட்ட தகவல்களையும் விற்பனை செய்ய மாட்டோம்.

உங்கள் தேவைகளின் அடிப்படையில் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வழங்குவது உட்பட எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வழங்க அல்லது மேம்படுத்துவதற்காக சில நேரங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் (கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி) நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம். தரவு பகிர்தல் தொடர்பான கூடுதல் தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

3.1.1 நீங்கள் முனைப்புடன் தேர்வுசெய்யும் அல்லது கோரும் பகிர்வு

உங்கள் ஒப்புதலுடன் அல்லது உங்கள் கோரிக்கையின் பேரில், மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது செயலியில் உள்நுழைய Xiaomi கணக்கைப் பயன்படுத்தும் போது, உங்களால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினருடன் உங்கள் ஒப்புதல்/கோரிக்கையின் வரம்புக்குள் உங்களின் தனிப்பட்ட தகவலைப் பகிர்வோம்.

3.1.2 எங்கள் குழுவுடன் தகவல்களைப் பகிர்தல்

வணிகச் செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வதற்கும், எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் அனைத்து செயல்பாடுகளையும் உங்களுக்கு வழங்குவதற்காகவும், நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவ்வப்போது மற்ற Xiaomi துணை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும்.

3.1.3 எங்கள் குழுமத்தின் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்

Xiaomi பல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுகிறது, இவை ஒன்றிணைந்து Xiaomi சூழல் அமைப்பை உருவாக்குகிறது. Xiaomi சூழல் அமைப்பு நிறுவனங்கள் என்பவை சார்பற்ற அமைப்புகள், Xiaomi ஆல் முதலீடு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டவை, அவை அதனதன் துறைகளில் நிபுணர்களாக இருப்பவை. Xiaomi ஆனது உங்கள் தனிப்பட்ட தகவலை சூழல் அமைப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இதன் மூலம் அவை சூழலமைப்பு நிறுவனங்களில் இருந்து ஆர்வமூட்டும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை (வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டும்) வழங்கவும் மேம்படுத்தவும் முடியும். இவற்றில் சில தயாரிப்புகள் அல்லது சேவைகள் Xiaomi பிராண்டாகவே இருக்கும், வேறு சில சொந்த பிராண்டைப் பயன்படுத்தலாம். சூழலமைப்பு நிறுவனங்களும், Xiaomi பிராண்டின் கீழ் அல்லது Xiaomi க்கு உரிமையான மற்ற பிராண்டின் கீழ் வரும் Xiaomi உடன் அவ்வப்போது தயாரிப்புகள் அல்லது சேவைகள் தொடர்பாக தகவலைப் பகிர்ந்து கொள்ளலாம், இதன் மூலம் வன்பொருள் மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்கவும், மேம்பட்ட செயல்பாடுகாள் மற்றும் பயனர் அனுபவத்தை உருவாக்கவும் செய்யலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களின் செயலாக்கத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக Xiaomi போதுமான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்கலாம் இதில் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக குறியாக்கம் செய்வதும் அடங்கலாம் ஆனால் அது மட்டுமல்ல.

3.1.4 மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்களுடன் பகிர்தல்

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்க உதவும் வகையில் மூன்றாம் தரப்புச் சேவை மற்றும் வணிகக் கூட்டாளர்களுடன் உங்களின் தனிப்பட்ட தகவலை, தேவைப்படும் பொழுது நாங்கள் பகிரக்கூடும்.

இதில் எங்கள் டெலிவரி சேவை வழங்குநர்கள், தரவு மையங்கள், தரவு சேகரிப்பு வசதிகள், வாடிக்கையாளர் சேவை வழங்குநர்கள், விளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் சேவை வழங்குநர்கள் மற்றும் பிற வர்த்தகக் கூட்டாளர்கள் ஆகியோரும் உள்ளடங்குவர். இந்த மூன்றாம் தரப்பினர், இந்தத் தனியுரிமைக் கொள்கையில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோக்கங்களுக்காக Xiaomi-இன் சார்பாக உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவார்கள். உங்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கு தேவையான தனிப்பட்ட தகவலைப் பகிர்வது என்பது முற்றிலும் முறையான, சட்டப்பூர்வமான, அத்தியாவசியமான, குறிப்பிட்ட மற்றும் வெளிப்படையான நோக்கங்களுக்கானது என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. உங்கள் சட்ட வரம்புக்குள் பொருந்தும் தனியுரிமைச் சட்டங்களுடன் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் இணங்கி செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் Xiaomi உரிய நடவடிக்கை எடுக்கும் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும். சில நேரங்களில் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் துணை-செயல்படுத்துநர்களைக் கொண்டிருக்கலாம்.

செயல்திறன் அளவீடு, பகுப்பாய்வு மற்றும் பிற வணிகச் சேவைகளை வழங்குவதற்காக, தகவல்களை (தனிப்பட்ட அல்லாத தகவல்களை) மூன்றாம் தரப்பினருடன் (எங்கள் இணையதள விளம்பரதாரர்கள் போன்றோர்) தொகுப்பு வடிவத்தில் பகிரப்படலாம். விளம்பரதாரர்கள் மற்றும் பிற வணிக கூட்டாளர்களுக்கு அவர்களின் விளம்பரம் மற்றும் சேவைகளின் செயல்திறன் மற்றும் கவரேஜை மதிப்பீடு செய்வதற்கும், அவர்களின் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களின் வகைகள் மற்றும் வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் சேவைகளுடன் எவ்வாறு அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள உதவும் தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். சில குறிப்பிட்ட தயாரிப்புகளை வாங்குகின்ற அல்லது சில பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்ற ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை போன்ற எங்கள் சேவைகளின் பொதுவான பயன்பாட்டு போக்குகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

3.1.5 மற்றவை

சட்ட தேவைகள், சட்ட நடைமுறைகள், பொது மற்றும் அரசு ஏஜென்சிகளின் வழக்கு மற்றும்/அல்லது கோரிக்கைகளுக்கு உட்பட்டு, Xiaomi உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டிய தேவை ஏற்படலாம். தேசியப் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம் அல்லது பொது முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களுக்கு வெளியிடுதல் அவசியமானது அல்லது பொருத்தமானது என்றாலும், உங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடலாம்.

எங்கள் விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக அல்லது எங்களுடைய வணிகம், உரிமைகள், சொத்துகள் அல்லது தயாரிப்புகளைப் பாதுகாக்க அல்லது பயனர்களைப் பாதுகாக்க, அல்லது வெளிப்படுத்த பின்வரும் நோக்கங்களுக்காக நியாயமான முறையில் தேவைப்பட்டாலும் (மோசடி, தயாரிப்பின் அங்கீகாரமற்ற பயன்பாடு, எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறுவது அல்லது பிற தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறிவது, தடுப்பது அல்லது தீர்ப்பது போன்றவற்றுக்கு) உங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடலாம். பொருந்துகின்ற தரவுப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மற்றும் அந்த வரம்பு வரை மட்டும், Xiaomi உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க, பயன்படுத்த அல்லது வெளிப்படுத்த நேரலாம். பொது அல்லது அரசு நிறுவனங்களுக்கு, மோசடி, விதிமீறல்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நடத்தைகளைத் தடுக்க உங்கள் கணக்கின் நம்பகத்தன்மை குறித்து மூன்றாம் தரப்புக் கூட்டாளர்களுடன் தொடர்புகொண்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதும் இதில் அடங்கலாம்.

கூடுதலாக, உங்கள் தனிப்பட்ட தகவல்களை கீழே குறிப்பிடப்பட்டவர்களுடனும் நாங்கள் பகிரலாம்:

• எங்கள் கணக்காளர்கள், தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் அல்லது அது போன்ற ஆலோசகர்கள் ஆகியோரிடம் தொழில் சார்ந்த ஆலோசனை வழங்கக் கேட்கும் போது;

• உண்மையான அல்லது சாத்தியமான விற்பனை அல்லது பிற நிறுவனப் பரிவர்த்தனை ஏற்பட்டால், Xiaomi குழுமத்தில் உள்ள ஏதேனும் நிறுவனம் தொடர்பான முதலீட்டாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய மூன்றாம் தரப்பினர்; மற்றும்

• இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி அல்லது உங்களுக்கு வேறு வகையில் தெரிவிக்கப்பட்டபடி பிற மூன்றாம் தரப்பினர், இதில் குறிப்பிட்ட வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாக உங்களால் அவ்வாறு செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்டிருந்தால் அவர்களும் உள்ளடங்குவர்.

3.2 மாற்றம்

பின்வரும் சூழல்களைத் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் Xiaomi உங்கள் தகவலை இடமாற்றாது:

• உங்கள் வெளிப்படையான ஒப்புதலை நாங்கள் பெற்றிருக்கும் போது;

• உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதிக்கக் கூடியவாறு Xiaomi அதன் சொத்துகளில் அனைத்தையும் அல்லது பகுதியளவு இணைத்தல், கையகப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் வைத்திருக்கக்கூடிய உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கக் கூடிய ஏதேனும் உரிமை, பயன்பாடு மற்றும் எந்தவொரு தேர்வு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை மின்னஞ்சல் மூலம் மற்றும்/அல்லது எங்கள் இணையதளங்களில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் அல்லது பொருத்தமான வேறு வழிமுறைகளின் மூலம் உங்களுக்குத் தெரிவிப்போம்.

• இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் அல்லது வேறு வகையில் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

3.3 பொது வெளியீடு

பின்வரும் சூழ்நிலைகளில், உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை Xiaomi பொதுவில் வெளியிடலாம்:

• ஒரு விளம்பரம், போட்டி அல்லது அதிர்ஷ்டக்குலுக்கலின் வெற்றியாளரை நாங்கள் அறிவிக்க வேண்டியிருந்தால், அதுபோன்ற சூழலில் நாங்கள் வரம்புடைய தகவல்களை மட்டுமே வெளியிடுவோம்;

• உங்களுடைய வெளிப்படையான ஒப்புதலை நாங்கள் பெற்றிருக்கும்போது அல்லது சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது பொதுவில் உள்ள மன்றங்கள் போன்ற எங்கள் சேவைகள் வழியாக நீங்கள் தகவல்களை வெளியிட்டிருக்கிறீர்கள் எனும்போது; மற்றும்

• பின்வருபவை உள்ளிட்ட சட்டம் அல்லது நியாயமான காரணங்களின் அடிப்படையில் பொதுவில் வெளியிடுதல்: சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், சட்ட நடைமுறைகள், வழக்கு அல்லது அதிகாரம் உள்ள அரசாங்கத் துறைகளின் வேண்டுகோளின் பேரில்.

4. உங்களின் தனிப்பட்ட தகவலை எப்படி சேமித்து பாதுகாக்கிறோம்

4.1 Xiaomi இன் பாதுகாப்பு நடைமுறைகள்

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் முனைப்புடன் செயலாற்றுகிறோம். அங்கீகரிக்கப்படாத அணுகல், வெளிப்படுத்தல் அல்லது அதுபோன்ற அபாயங்கள் போன்றவற்றைத் தடுக்க, உங்கள் மொபைல் சாதனத்தில் இருந்தும் Xiaomi இணையதளங்களில் இருந்தும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பாதுகாக்க சட்டத்தால் கோரப்படும் நேரடியான, எலக்ட்ரானிக் மற்றும் நிர்வாக நடைமுறைகளை உருவாக்கியுள்ளோம். பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்கியபடி உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவோம்.

எடுத்துக்காட்டாக, உங்கள் Xiaomi கணக்கை அணுகும்போது, இன்னும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக எங்கள் இரண்டு-அடுக்கு சரிபார்ப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம் மற்றும் நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என்று நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம். உங்கள் Xiaomi சாதனம் மற்றும் எங்கள் சர்வர்களுக்கு இடையே உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கடத்தப்படும்போது, அந்தத் தரவு Transport Layer Security (TLS) மற்றும் பொருத்தமான என்கிரிப்ஷன் அல்காரிதம்கள் மூலமாக குறியாக்கப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

கட்டுப்பாடுடைய பாதுகாக்கப்பட்ட இடங்களில் உள்ள பாதுகாப்பான சர்வர்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து வைக்கப்படுகின்றன. உங்கள் தகவல்களை முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் வகைப்படுத்துகிறோம், மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு தேவையான பாதுகாப்பு நிலை இருப்பதை உறுதிப்படுத்துகிறோம். கிளவுட்-அடிப்படையிலான தரவு சேமிப்பிடத்திற்கு சிறப்பு அணுகல் கட்டுப்பாடுகளை நாங்கள் வைத்திருக்கிறோம் மேலும் நாங்கள் எங்களுடைய தகவல் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் செயலாக்குதல் நடைமுறைகளை அடிக்கடி மதிப்பாய்வு செய்கிறோம், இதில் அங்கீகாரமற்ற அணுகல் மற்றும் பயன்பாட்டில் இருந்து பாதுகாக்கும் நேரடியான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அடங்கும்.

வணிகக் கூட்டாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களால் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இந்த மூன்றாம் தரப்பினர்கள் பொருத்தமான பாதுகாப்பு தரநிலைகளைப் பராமரிக்கிறார்களா என்பதை பொருத்தமான ஒப்பந்தத் தடைகளை அமல்படுத்துவதனாலும் தேவையான இடங்களில் தணிக்கை மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்வதனாலும் நாங்கள் சரிபார்க்கிறோம். கூடுதலாக, எங்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்களின் பணியாளர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் இரகசியத்தன்மையை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தக் கடமைகளுக்கு உட்பட்டவர்கள்.

தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி எங்கள் பணியாளர்களுக்கு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துகிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க, நாங்கள் நியாயமான மற்றும் சட்டத்தின்படி நடைமுறைப்படுத்தக் கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். ஆனாலும், இணையத்தைப் பயன்படுத்துவது முழுமையாகப் பாதுகாப்பானதல்ல என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், மேலும் இந்தக் காரணத்தினால்தான், உங்களிடமிருந்து அல்லது இணையத்தில் உங்களுக்கு இடமாற்றப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் அல்லது அதன் ஒருங்கிணைவு பாதிக்கப்படாது என்ற உறுதியை எங்களால் தர முடியாது.

பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் தேவைக்கேற்ப தனிப்பட்ட தரவு மீறல்களை நாங்கள் கையாளுகிறோம், தேவைப்படும் இடங்களில் தொடர்புடைய தரவுப் பாதுகாப்பு மேற்பார்வை ஆணையம் மற்றும் தரவு பொறுப்பு நபர்களுக்கு மீறலை அறிவிப்போம்.

எங்கள் தகவல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் அவற்றின் பலனளிப்பு திறனைச் சரிபார்ப்பதற்காக அவ்வப்போது செய்யப்படும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளில் முறையாகத் தேர்ச்சியடைகின்றன. Xiaomi தகவல் முறைமை தகவல் பாதுகாப்பு மேலாண்மை முறைமைகளுக்கான (information security management systems ISMS) ISO/IEC 27001:2013 சான்றளிப்பைப் பெற்றுள்ளது. Xiaomi மின் வணிகம் மற்றும் Mi Home IoT தளம் ஆகியவை தனிநபர் தகவல் மேலாண்மை முறைமைகளுக்கான (personal information management systems -PIMS) ISO/IEC 27701:2019 சான்றளிப்பைப் பெற்றுள்ளன. Xiaomi ஆப்பரேட்டிங் சிஸ்டமானது பொது கிளவுட் தனிநபர் தகவல் பாதுகாப்புக்கான ISO/IEC 27018:2019 சான்றளிப்பைப் பெற்றுள்ளது.

4.2 நீங்கள் என்ன செய்யலாம்

Xiaomi -இல் உள்ள உங்கள் கணக்கின் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடிய கடவுச்சொல் கசிவு வேறு தளங்களில் ஏற்பட்டிருந்தால், உங்கள் உள்நுழைவு கடவுச்சொல் அல்லது கணக்குத் தகவல்களை யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பதன் மூலம் Xiaomi சேவைகளுக்குத் தனித்துவமான கடவுச்சொல்லை அமைக்கலாம் மற்றும் உங்கள் கடவுச்சொல் அல்லது கணக்குத் தகவல்களை யாருக்கும் (அந்த நபர் உங்களால் முறையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் தவிர) வெளிப்படுத்தாமல் இருக்கலாம். சாத்தியமாகும் போதெல்லாம் நீங்கள் பெற்ற சரிபார்ப்புக் குறியீடுகளை (Xiaomi வாடிக்கையாளர் சேவை என்று கூறுபவர்கள் உட்பட) யாருக்கும் வெளியிட வேண்டாம். Xiaomi கணக்குப் பயனராக Xiaomi இணையதளங்களில் நீங்கள் உள்நுழையும் போதெல்லாம், குறிப்பாக வேறொருவரின் கணினியில் அல்லது பொது இணைய டெர்மினல்களில், உங்கள் அமர்வின் இறுதியில் வெளியேற மறக்காதீர்கள்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உங்களுடைய தோல்வி ஏற்படுவதன் காரணமாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினர் அணுகுவதால் ஏற்படக் கூடிய பாதுகாப்பு குறைபாடுகளுக்கு Xiaomi ஐப் பொறுப்பாக்க முடியாது. மேற்குறிப்பிட்டவையில் அடங்காமல், உங்கள் கணக்கை ஏதேனும் ஒரு இணையப் பயனர் அங்கீகரிப்பின்றி அணுகினாலோ வேறு வகையில் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டாலோ, நீங்கள் எங்களிடம் உடனடியாக அறிவிக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவல்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு உங்கள் உதவியே எங்களுக்கு உதவும்.

4.3 உங்கள் சாதனத்தில் மற்ற அம்சங்களை அணுகுதல்

தொடர்புகளைப் பயன்படுத்த மின்னஞ்சலுக்குத் திறனளிப்பது, SMS சேமிப்பிடம் மற்றும் Wi-Fi நெட்வொர்க் நிலை போன்றவற்றுக்காக எங்கள் செயலிகள் உங்கள் சாதனத்தில் குறிப்பிட்ட அம்சங்களை அணுகலாம். இந்தத் தகவல்கள், உங்கள் சாதனத்தில் செயலிகள் இயங்க அனுமதிக்கவும், நீங்கள் இந்தப் செயலிகளுடன் ஊடாட அனுமதிக்கவும் பயன்படுத்தப்படும். இந்த அனுமதிகளை உங்கள் சாதனத்தில் அல்லது https://privacy.mi.com/support மூலம் எங்களைத் தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் இந்த அனுமதிகளை நீங்கள் முடக்கலாம்.

4.4 தக்கவைப்புக் கொள்கை

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்கள் சேகரிப்பின் நோக்கத்திற்கு அல்லது குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவைக்காக வழங்கப்பட்ட எந்தவொரு தனித்தனி தனியுரிமைக் கொள்கைக்கு அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின்படி தேவைப்படும் கால அளவிற்குத் தனிப்பட்ட தகவல்களைத் தக்கவைத்திருப்போம். குறிப்பிட்ட சேவை அல்லது தொடர்புடைய தயாரிப்புப் பக்கத்தில் விரிவான தக்கவைப்பு கால அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சேகரிப்பின் நோக்கம் நிறைவேறியதும், அல்லது அழிப்பதற்கான உங்கள் கோரிக்கையை நாங்கள் உறுதிசெய்த பின்பு அல்லது தொடர்புடைய தயாரிப்பு அல்லது சேவையின் செயல்பாட்டை நாங்கள் நிறுத்திய பின்னர் தனிப்பட்ட தகவல்களை வைத்திருப்பதை நிறுத்துவோம் மற்றும் நீக்குவோம் அல்லது அவற்றின் அடையாளங்களை அகற்றி விடுவோம். சாத்தியமான இடங்களில் எல்லாம், நாங்கள் அடையாளம் காணப்பட்ட வகைகள், தனிநபர் தரவின் வகைகள் அல்லது உருப்படிகள் ஆகியவற்றைப் பொதுவாக எவ்வாறு வைத்திருப்போம் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இந்தத் தக்கவைப்புக் காலங்களைப் பற்றி தீர்மானிக்கும்போது, நாங்கள் பின்வரும் தேர்வளவையைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்:

• தனிப்பட்ட தரவின் அளவு, இயல்பு மற்றும் உணர்திறன்

• அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது வெளிப்பாட்டின் காரணமாக எழும் தீங்கிற்கான அபாய அளவு;

• நாங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கான நோக்கங்கள் மற்றும் அந்த நோக்கங்களை எட்டுவதற்காகக் குறிப்பிட்ட தரவு எவ்வளவு நேரம் எங்களுக்குத் தேவைப்படும் என்பது;

• அந்தத் தனிப்பட்ட தகவல்கள் எவ்வளவு காலம் துல்லியமாகவும் புதிய நிலையிலும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது

• சாத்தியமான எதிர்கால சட்டப்பூர்வ உரிமை கோரல்களுடன் அந்தத் தனிப்பட்ட தரவு எவ்வளவு காலம் தொடர்புடையதாக இருக்க முடியும் என்பது; மற்றும்

• குறிப்பிட்ட பதிவுகளைக் கட்டாயமாக எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஏதேனும் பொருந்தக் கூடிய சட்ட, கணக்குப்பதிவு, தெரிவித்தல் அல்லது ஒழுங்குமுறை தேவைப்பாடுகளின் அடிப்படையில்.

உங்கள் சட்ட வரம்பைச் சார்ந்து, இந்தத் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குகின்றதற்கான விதிவிலக்காக இருக்கக் கூடியவை, பொது நலன், அறிவியல், வரலாற்று ஆராய்ச்சி அல்லது புள்ளிவிவர நோக்கங்களாகும். தரவு செயலாக்கம் சேகரிப்பின் அசல் நோக்கத்துடன் தொடர்புடையதாக இல்லாவிட்டாலும், பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது உங்கள் கோரிக்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் மற்றும் தேவைப்படும் இடங்களில், Xiaomi இந்த வகை தகவல்களை அதன் தரநிலை தக்கவைப்புக் காலத்தை விட நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ளும்.

5. உங்கள் உரிமைகள்

உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்தும் திறன் உங்களிடம் உள்ளது.

5.1 கட்டுப்படுத்தும் அமைப்புகள்

தனியுரிமை அக்கறைகள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்பதை Xiaomi அறிந்துள்ளது. எனவே, உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது, பயன்படுத்துவது, வெளிப்படுத்துவது அல்லது செயலாக்குவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக Xiaomi உங்களுக்கு வழங்கும் வழிகளை எடுத்துக்காட்டுகளையும் உங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும் வழங்குகிறோம்:

• பயனர் அனுபவத் திட்டம் மற்றும் இருப்பிட அணுகலை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்;

• Xiaomi கணக்கில் உள்நுழையவும் அல்லது வெளியேறவும்.

• Xiaomi கிளவுட் ஒத்திசைவை இயக்கவும் அல்லது முடக்கவும்;

https://i.mi.com என்பதற்குச் சென்று Xiaomi கிளவுடில் சேமிக்கப்பட்டிருக்கும் எந்தத் தகவலையும் நீக்கலாம்;

• முக்கியமான அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் மற்ற சேவைகளையும் அம்சங்களையும் இயக்கவும் அல்லது முடக்கவும். உங்கள் சாதனத்தின் பாதுகாப்பு நிலையுடன் தொடர்புடைய கூடுதல் விவரங்களை பாதுகாப்பு செயலியில் நீங்கள் பெறலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக, உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதை நீங்கள் முன்பே ஒப்புக்கொண்டிருந்தால் https://privacy.mi.com/support என்பதன் வழியாக உங்கள் விருப்பத்தேர்வுகளை மாற்றிக் கொள்ளலாம்.

5.2 உங்கள் தனிப்பட்ட தகவல் தொடர்பான உங்கள் உரிமைகள்

பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி உங்களைப் பற்றி (இதன் பிறகு கோரிக்கை எனக் குறிப்பிடப்படும்) நாங்கள் வைத்திருக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் அணுக, சரிசெய்ய மற்றும் நீக்க (மற்றும் வேறு சில குறிப்பிட்ட உரிமைகளும்) உங்களுக்கு உரிமை இருக்கலாம். பொருந்தக் கூடிய சட்டங்களின் கீழ் இந்த உரிமைகள் குறிப்பிட்ட விதிவிலக்குகள் மற்றும் விலக்கங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டது.

https://account.xiaomi.com அல்லது சாதனத்தில் உள்ள உங்கள் கணக்கில் உள்நுழைவதன் மூலமும் உங்களுடைய Xiaomi கணக்கில் உள்ள தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடைய விவரங்களை நீங்கள் அணுகலாம் மற்றும் புதுப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு, எங்களை https://privacy.mi.com/support வழியாகத் தொடர்பு கொள்ளவும்.

பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், இது உங்கள் கோரிக்கையை இன்னும் திறம்படச் செயலாக்குவதற்கு எங்களுக்கு உதவும்:

(1) Xiaomi இன் பிரத்யேகமாக கோரிக்கை வழிமுறையின் வழியாக கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் உங்கள் தகவல் பாதுகாப்புக்கு, உங்கள் கோரிக்கையானது எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் (வாய்மொழியிலான கோரிக்கையை உள்ளூர் சட்டம் வெளிப்படையாக அங்கீகரித்தால் தவிர);

(2) உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கு தேவையான போதுமான தகவலை Xiaomiக்கு வழங்கி, தரவில் உள்ளவர் அல்லது தரவில் உள்ளவரின் சார்பாக செயல்பட சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நபர் நீங்கள் என்பதை அடையாளப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் வேண்டும்.

உங்கள் கோரிக்கையைச் செயலாக்கப் போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைத்தவுடன், உங்களுக்குப் பொருந்தக் கூடிய தரவு பாதுகாப்புச் சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் உங்கள் கோரிக்கையைச் செயலாக்கத் தொடங்குவோம்.

விவரம்:

• உங்கள் தனிப்பட்ட தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றியும் உங்கள் உரிமைகளைப் பற்றியும் தெளிவான, வெளிப்படையான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலான தகவலைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த தனியுரிமைக் கொள்கையில் தகவல்களை வழங்குகிறோம்.

• பொருந்தக்கூடிய சட்டத் தேவைகளின் அடிப்படையில், எங்களால் சேகரிக்கப்பட்டு செயலாக்கப்படும் உங்கள் தனிப்பட்ட தகவல்களானது உங்கள் கோரிக்கையின் அடிப்படையில், இலவசமாக வழங்கப்படும். தொடர்புடைய தகவல் மீதான கூடுதல் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், பொருந்தக் கூடிய சட்டங்களால் அனுமதிக்கப்பட்டபடி அசல் நிர்வாகச் செலவுகளின் அடிப்படையில் உங்களிடம் இருந்து நியாயமான கட்டணத்தை நாங்கள் வசூலிக்கக்கூடும்.

• உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தகவல் தவறாக அல்லது முழுமையற்று இருந்தால், உபயோகத்தின் அடிப்படையில் அதைச் சரிசெய்ய அல்லது முழுமையாக்க உங்களுக்கு வசதி உள்ளது.

• பொருந்தக்கூடிய சட்டத் தேவைகளின்படி, உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத சூழல்களில் அதை நீக்க அல்லது அகற்றுவதற்கான கோரிக்கையை முன்வைக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அழிக்கக் கோரும் உங்கள் கோரிக்கை தொடர்பான அடிப்படை காரணங்களை நாங்கள் பரிசீலிப்போம். தொழில்நுட்ப நடைமுறைகள் உள்பட அதற்கான நியாயமான நடவடிக்கைகள் எடுப்போம். பொருந்தக்கூடிய சட்டம் மற்றும்/அல்லது தொழில்நுட்ப வரம்புகளின் காரணமாக காப்புப் பிரதி அமைப்பிலிருந்து தகவலை உடனடியாக எங்களால் அகற்ற முடியாமல் போகக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். அதுபோன்ற சூழலில், உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாகச் சேமித்து, காப்புப்பிரதி நீக்கப்படும் வரை அல்லது பெயரற்ற முறையில் வைக்கப்படும் வரை , மேற்கொண்டு செய்யப்படும் செயல்முறைகளிலிருந்து தனித்து வைப்போம்.

• நேரடிச் சந்தைப்படுத்தலைச் (சுயவிவரமிடுதல் பயன்படுத்தப்படும் இடங்கள் உட்பட) செயலாக்குவது மற்றும் சட்டரீதியிலான எங்கள் ஆர்வங்களின்படி நாங்கள் செயலாக்க வேண்டிய சூழல்களில் (சுயவிவரமிடுதல் உள்பட) சில வகையான செயலாக்கங்களை மறுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

குறிப்பாக சில சட்ட எல்லைகளுக்கு உட்பட்ட சட்டங்களின் கீழ்:

• உங்கள் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதிலிருந்து கட்டுப்படுத்துவதற்காக எங்களிடம் கோருவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. உங்களுடைய கட்டுப்படுத்தல் கோரிக்கை தொடர்பான அடிப்படை காரணங்களை நாங்கள் பரிசீலிப்போம். அந்த அடிப்படை காரணங்கள் GDPRக்குப் பொருந்தினால், GDPR இல் பொருந்தக் கூடிய சூழல்களில் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவோம், மேலும் செயலாக்கத்திற்கான கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்படும்போது உங்களுக்குத் தெரிவிப்போம்.

• தானியங்கு செயலாக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட முடிவுகளுக்கு ஆளாகமல் இருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு, உங்களுக்குத் தொடர்புடைய சட்டப்பூர்வ செயல்முறைகளை உருவாக்கும் சுயவிவரப்படுத்தல் அல்லது உங்களை கணிசமான வகையில் பாதிக்கும் அம்சங்களும் இதில் அடங்கும்.

• உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைக் கட்டமைக்கப்பட்ட, பொதுவாகப் பயன்படுத்தப்படும் வடிவமைப்பில் பெறவும் அதை மற்றொரு தரவுக் கட்டுப்பாட்டாளருக்கு (தரவு இடமாற்றிக்கொள்ளுதல்) அனுப்பவும் உங்களுக்கு உரிமை உள்ளது.

பொருந்தக் கூடிய சட்டங்களின் கீழ் விதிவிலக்குகள் பொருந்தும் இடங்களில் அல்லது வேறுவகைகளில் எங்களுக்கு அந்த உரிமை இருக்கும்போது, எடுத்துக்காட்டாக, கோரிக்கையானது வெளிப்படையாகவே காரணமில்லாதது அல்லது வெளிப்படையாகவே மிகையானது அல்லது மூன்றாம் தரப்பினரைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதைக் கோருவது போன்ற சூழல்களில் கோரிக்கைகளைச் செயலாக்க மறுப்பதற்கு அல்லது கோரிக்கைகளில் சிலவற்றுக்கு மட்டும் இணங்கி நடப்பதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது. பொருந்தக் கூடிய சட்டங்களின்கீழ் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, சில சூழ்நிலைகளில், நாங்கள் ஒரு கட்டணத்தை வசூலிக்கலாம். கோரிக்கையின் சில பகுதிகளின்படி, தகவல்களின் குறிப்பிட்ட பகுதிகளை நீக்கினால், பொருந்தக் கூடிய சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட நிறுவுதல், பயன்படுத்துதல் அல்லது சட்டப்பூர்வ கோரல்களுக்கு எதிரான தற்காப்பு அல்லது காரணங்களுக்காக் தகவல்களை சட்டப்படி பயன்படுத்துவதற்கான திறனை நாங்கள் இழக்க நேரிடலாம் என்று நம்பினாலும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

5.3 ஒப்புதலைத் திரும்பப் பெறுதல்

கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம், எங்கள் வசம் அல்லது எங்களது கட்டுப்பாட்டில் உள்ள உங்களது தனிப்பட்ட தகவலைச் சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும்/அல்லது வெளியிடுதல் உட்பட, குறிப்பிட்ட காரணத்திற்காக நீங்கள் எங்களுக்கு அளித்த ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சேவையின் அடிப்படையில், https://privacy.mi.com/support என்பதில் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். கோரிக்கை விடுக்கப்பட்டதிலிருந்து, சரியான கால அளவிற்குள் உங்களது கோரிக்கையைச் செயல்படுத்தி, அதன் பிறகு உங்களது கோரிக்கையின் படி, உங்களது தனிப்பட்ட தகவலைச் சேகரிக்க, பயன்படுத்த மற்றும்/அல்லது வெளியிட மாட்டோம்.

நீங்கள் எந்த அளவிற்கு ஒப்புதலைத் திரும்பப் பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, Xiaomi இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடைய முழுப் பலனையும் தொடர்ந்து பெறமுடியாமல் போகலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். திரும்பப் பெறுதல் நிறைவு செய்யப்படாத வரை, உங்களது ஒப்புதல் அல்லது அங்கீகாரத்தின் திரும்பப் பெறுதல் கோரிக்கையானது, ஒப்புதலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட எங்களது செயலாக்கத்தின் கால அளவைப் பாதிக்காது.

5.4 சேவையையோ கணக்கையோ ரத்துசெய்தல்

ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையை நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால் https://privacy.mi.com/support வழியாக நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Xiaomi கணக்கை ரத்துசெய்ய விரும்பினால், Xiaomi தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் முழுமையான பயன்பாட்டையும் ரத்துசெய்தலின் மூலம் பெற முடியாமல் போகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ரத்துசெய்தல் தவிர்க்கப்படலாம் அல்லது தாமதமாக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, Mi மியூசிக் உறுப்பினர் சேவைக்குச் செலுத்த வேண்டிய தொகை, தீம் ஸ்டோரில் உள்ள கட்டணம் செலுத்த வேண்டிய தீம் அல்லது Mi ஃபைனான்ஸில் செலுத்த வேண்டிய கடன் தொகை போன்ற உங்களது கணக்கில் செலுத்த வேண்டிய தொகைகள் இருந்தால், உங்களது கோரிக்கையை உடனடியாக எங்களால் செயல்படுத்த முடியாது.

மூன்றாம் தரப்பினர் கணக்கின் மூலமாக Xiaomi இல் நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கணக்கை ரத்து செய்வதற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

6. சர்வதேச அளவில் உங்களது தனிப்பட்ட தகவல் எவ்வாறு பரிமாற்றப்படுகிறது

Xiaomi, சர்வதேச செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பின் மூலம் தனிப்பட்ட தகவலைச் செயல்படுத்தி காப்புப் பிரதி எடுக்கிறது. Xiaomi தற்போது சீனா, இந்தியா, நெதர்லாந்து, ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தரவு மையங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கத்திற்காக, உங்களது தகவல், பொருந்தும் சட்டத்திற்கு ஏற்ப இந்தத் தரவு மையங்களுக்குப் பரிமாற்றப்படும்.

அத்துடன் உங்களது தனிப்பட்ட தகவலை மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கும் வணிகக் கூட்டாளர்களுக்கும் பகிர்வோம் மேலும், அதன் காரணமாகவும் உங்களது தரவு பிற நாடுகளுக்கோ மண்டலங்களுக்கோ இடமாற்றம் செய்யப்படலாம். இந்த சர்வதேச வசதிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள சட்ட எல்லையானது, உங்களது சட்ட எல்லையில் உள்ளது போன்ற தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதற்கான அதே தரநிலைகளைப் பெற்றிருக்கலாம் அல்லது பெற்றிருக்காமல் போகலாம். வெவ்வேறு தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வெவ்வேறு அபாயங்கள் இருக்கின்றன. இருப்பினும், இந்தத் தனியுரிமைக் கொள்கையுடன் இணங்குவதற்கும் உங்களது தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதற்குமான எங்களது கடப்பாட்டில் இது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

குறிப்பாக,

• பொருந்தும் சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்படும் எல்லை கடந்த இடமாற்றங்களைத் தவிர, சீனாவின் மெயின்லேண்ட் நிலப்பரப்பிற்குள் நாங்கள் சேகரிக்கும் மற்றும் செயல்பாடுகளால் உருவாக்கும் தனிப்பட்ட தகவல்களானது, சீனா மெயின்லேண்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ள தரவு மையங்களில் சேமிக்கப்படும்.

• ரஷ்ய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் எல்லை கடந்த இடமாற்றங்களைத் தவிர, ரஷ்யாவில் நாங்கள் சேகரித்து செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கும் தனிப்பட்ட தகவலானது, ரஷ்யாவில் அமைந்துள்ள தரவு மையங்களில் சேமிக்கப்படும்.

• இந்தியாவில் நாங்கள் சேகரித்து செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கும் தனிப்பட்ட தகவலானது, இந்தியாவில் அமைந்துள்ள தரவு மையங்களில் சேமிக்கப்படும்.

உங்களது சட்ட எல்லைக்கு வெளியே உள்ள துணை அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உங்களது தனிப்பட்ட தகவலை நாங்கள் இடமாற்றம் செய்ய வேண்டி இருந்தால், தொடர்புடைய பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு நாங்கள் இணங்குவோம். ஒரே மாதிரியான பாதுகாப்பைச் செயல்படுத்துவதன் மூலம் இதுபோன்ற அனைத்து இடமாற்றங்களும், பொருந்தக்கூடிய உள்ளூர் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் படி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறோம். பாதுகாப்பு செயல்முறைகளைப் பற்றி அறிய நீங்கள் எங்களை https://privacy.mi.com/support என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

எங்களது தயாரிப்புகளையும் சேவைகளையும் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு (European Economic Area - EEA) உட்பட்ட பகுதியில் நீங்கள் பயன்படுத்தினால், Xiaomi Technology Netherlands B.V. ஆனது தரவுக் கட்டுப்பாட்டாளராகச் செயல்படும் மேலும் Xiaomi Technologies Singapore Pte. Ltd. தரவுச் செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்கும். "எங்களைத் தொடர்பு கொள்ள" எனும் பிரிவில், தொடர்பு கொள்வதற்கான விவரங்களைக் காணலாம்.

Xiaomi ஆனது, EEA வில் உங்களிடமிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தரவை, EEAக்கு வெளியே உள்ள Xiaomi இன் குழு நிறுவனத்திற்கோ அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநருக்கோ பகிர்ந்தால், EU ஒப்பந்தத் தரநிலைப் பிரிவுகள் அல்லது GDPR இல் அவற்றிற்கு வழங்கப்பட்ட மற்ற பாதுகாப்பு அமைப்புகளின் அடிப்படையில் பகிர்வோம். பாதுகாப்பு செயல்முறைகளைப் பற்றி அறிய நீங்கள் எங்களை https://privacy.mi.com/support என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்கள் தரநிலை ஒப்பந்த விதிமுறைகளின் நகலைக் கோரலாம்.

7. சிறார் பாதுகாப்பு

எங்களது தயாரிப்புகளையோ சேவைகளையோ குழந்தை பயன்படுத்துவதைக் கண்காணிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பொறுப்பு என நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், நாங்கள் சிறாருக்கு நேரடியாகச் சேவைகளை வழங்குவதோ குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை மார்கெட்டிங் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதோ இல்லை.

நீங்கள் பெற்றோராகவோ பாதுகாவலராகவோ இருந்து, Xiaomi-இடம், சிறார் தனிப்பட்ட தகவலை வழங்கியுள்ளார் என நீங்கள் நம்பினால், அந்தத் தனிப்பட்ட தகவலானது உடனடியாக அகற்றப்படுவதையும், பொருந்தக்கூடிய எந்தவொரு Xiaomi சேவைகளில் இருந்தும் சிறார் குழு விலகிவிட்டார் என்பதையும் உறுதி செய்துகொள்ள, https://privacy.mi.com/support என்ற முகவரியின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

8. மூன்றாம் தரப்பினர் இணையதளங்கள் மற்றும் சேவைகள்

மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் தயாரிப்புகள் அல்லது சேவைகள் ஆகியவற்றுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கை பொருந்தாது. நீங்கள் பயன்படுத்தும் Xiaomi தயாரிப்பு அல்லது சேவையைப் பொறுத்து, குரல் ஆதரவு, கேமரா செயலாக்கம், வீடியோ பிளேபேக், சிஸ்டம் கிளீனிங் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சேவைகள், கேமிங், புள்ளிவிவரங்கள், சமூக ஊடக தொடர்பு, கட்டண செயலாக்கம், வரைபட வழிசெலுத்தல், பகிர்வு, புஷ், தகவல் வடிகட்டுதல், உள்ளீட்டு முறைகள் போன்றவற்றை உள்ளடக்கக்கூடிய மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புகள் அல்லது சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம். இவற்றில் சில மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கான இணைப்புகளின் வடிவில் வழங்கப்படும், மேலும் சில SDKகள், APIகள் போன்ற வடிவங்களில் அணுகப்படும். இந்த தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பயன்படுத்தும்போதும் உங்கள் தகவல்கள் சேகரிக்கப்படலாம். இந்தக் காரணத்திற்காகவே, எங்களுடைய தனியுரிமைக் கொள்கையைப் படித்ததைப் போலவே மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கையையும் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்று உங்களிடம் மிகவும் வலியுறுத்துகிறோம். மூன்றாம் தரப்பினர் உங்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் மற்றும் அதை எங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. எங்கள் சேவைகளில் இருந்து இணைக்கப்படும் பிற தளங்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கை பொருந்தாது.

மேலே பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் போது எந்தெந்த மூன்றாம் தரப்பு விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் பொருந்தக்கூடும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

உங்கள் ஆர்டரை முடிவுசெய்து பணம் செலுத்த மூன்றாம் தரப்பு செக்-அவுட் சேவை வழங்குநரை நீங்கள் பயன்படுத்தும்போது, செக்-அவுட்டின் போது நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படுகின்றன.

நீங்கள் பாதுகாப்பு செயலியில் பாதுகாப்பு ஸ்கேன் அம்சத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் தேர்வு செய்த சேவையைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்று பொருந்தும்:

• Avast-இன் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்புக் கொள்கை: https://www.avast.com/privacy-policy

• Antiy Mobile Security AVL SDK-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.avlsec.com/en/privacy-policy

• Tencent-இன் சேவை விதிமுறைகள்: https://privacy.qq.com/

பாதுகாப்பு செயலியில் உள்ள கிளீனர் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, Tencent-இன் தனியுரிமைக் கொள்கைப் பொருந்தும்: https://privacy.qq.com

சில குறிப்பிட்ட சிஸ்டம் செயலிகளில் நீங்கள் விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தும்போது, நீங்கள் தேர்வு செய்த சேவையைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்று பொருந்தும்:

• Google-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.google.com/policies/privacy

• Facebook இன் தனியுரிமைக் கொள்கை: https://www.facebook.com/about/privacy/update?ref=old_policy

நீங்கள் Google உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தும்போது, Google தனியுரிமைக் கொள்கை பொருந்தும்: https://policies.google.com/privacy

நாங்கள் புள்ளிவிவரங்களைப் பகுப்பாய்வு செய்யும்போது, செயலி செயலிழப்புகளைக் கண்காணிக்கும்போது மற்றும் கிளவுட் கட்டுப்பாட்டுத் திறன்களை வழங்கும்போது நாங்கள் Google Analytics for Firebase அல்லது Google Inc. வழங்கும் Firebase Analytic போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் Google Firebase தனியுரிமைக் கொள்கையைப் பற்றி https://policies.google.com/privacy மற்றும் https://www.google.com/policies/privacy/partners/ ஆகிய இடங்களில் மேலும் படிக்கலாம்.

ஏதேனும் Xiaomi சிஸ்டம் செயலிகளில் விளம்பரங்களை வழங்குவதற்காக, மூன்றாம் தரப்பு விளம்பரக் கூட்டாளர்கள், உங்கள் விளம்பரக் கிளிக்குகள் மற்றும் உள்ளடக்கப் பார்வைகள் அல்லது இணையதளங்கள் அல்லது செயலிகளில் பிற செயல்பாடுகள் போன்று, உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளில் இருந்து உருவாக்கப்பட்ட தரவைச் சேகரிக்கலாம்.

• Google-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.google.com/policies/privacy

• Facebook இன் தனியுரிமைக் கொள்கை: https://www.facebook.com/about/privacy/update?ref=old_policy

• Unity-இன் தனியுரிமைக் கொள்கை: https://unity3d.com/legal/privacy-policy

• Vungle-இன் தனியுரிமைக் கொள்கை: https://vungle.com/privacy/

• ironSource-இன் தனியுரிமைக் கொள்கை: https://developers.ironsrc.com/ironsource-mobile/air/ironsource-mobile-privacy-policy/

• AppLovin-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.applovin.com/privacy/

• Chartboost-இன் தனியுரிமைக் கொள்கை: https://answers.chartboost.com/en-us/articles/200780269

• MoPub-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.mopub.com/legal/privacy/

• Mytarget-இன் தனியுரிமைக் கொள்கை: https://legal.my.com/us/mail/privacy_nonEU/

• Yandex-இன் தனியுரிமைக் கொள்கை: https://yandex.com/legal/privacy/

• Tapjoy-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.tapjoy.com/legal/advertisers/privacy-policy/

• AdColony-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.adcolony.com/privacy-policy/

(ஏதேனும் இருந்தால்) எங்கள் விளம்பரங்களுடன் உங்கள் தகவல் பரிமாற்றம் உட்பட எங்கள் விளம்பரப்படுத்தல் கூட்டாளர்களுக்காக அறிக்கைகளை உருவாக்குவதற்காக, எங்கள் விளம்பரப்படுத்தல் கூட்டாளர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கியபடி, உங்கள் தகவல்களைச் சேகரித்து மூன்றாம் தரப்பு அட்ரிப்யூஷன் நிறுவனங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடும். நீங்கள் உபயோகிக்கின்ற சிஸ்டம் செயலிகளைப் பொருத்து, மூன்றாம் தரப்பு பண்பு நிறுவனங்களில் இவை அடங்கும்:

• Adjust-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.adjust.com/terms/privacy-policy/

• Appsflyer's அந்தரங்கக் கொள்கை: https://www.appsflyer.com/privacy-policy/

• Affise-இன் தனியுரிமைக் கொள்கை: https://affise.com/privacy-policy/

• Miaozhen-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.miaozhen.com/en/privacy

• Nielsen-இன் தனியுரிமைக் கொள்கை: https://www.nielsen.com/cn/en/legal/privacy-policy/

9. இந்த தனியுரிமைக் கொள்கையை நாங்கள் எவ்வாறு புதுப்பிக்கிறோம்

வணிகம், தொழில்நுட்பம், பொருந்தக்கூடிய சட்டம் மற்றும் சிறந்த வியாபாரப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அந்தரங்கக் கொள்கையை நாங்கள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறோம், மேலும் இந்தத் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் புதுப்பிக்கக்கூடும். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் பெரிய மாற்றத்தைச் செய்தால், மின்னஞ்சல் (உங்கள் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்), Xiaomi இணையதளங்களில் வெளியிடுதல் அல்லது மொபைல் சாதனங்கள் மூலம் உங்களுக்குத் தெரிவிப்பது போன்ற பதிவுசெய்த தொடர்புத் தகவல் மூலம் உங்களுக்குத் தெரிவிப்போம். இதன் மூலமாக நாங்கள் சேகரிக்கும் தகவல் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி நீங்கள் அறியலாம். அந்தரங்கக் கொள்கைபற்றிய இப்படியான மாற்றங்கள் அறிவிப்பில் அல்லது இணைய தளத்தில் குறிப்பிடப்படும் தேதியிலிருந்து அமலாகும் எங்கள் தனியுரிமை நடைமுறைகள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு இந்த பக்கத்தை அவ்வப்போது வந்துப்பார்க்க உங்களை ஊக்குவிக்கிறோம். இணையதளம், மொபைல் மற்றும்/அல்லது வேறு ஏதேனும் சாதனத்தில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும். பொருந்தக் கூடிய சட்டங்களால் கோரப்படும் இடங்களில் எல்லாம், உங்களிடமிருந்து கூடுதலாகத் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் போது அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் புதிய காரணங்களுக்காகப் பயன்படுத்தும்போது அல்லது வெளியிடும்போது உங்களின் வெளிப்படையான ஒப்புதலை நாங்கள் கேட்போம்.

10. தொடர்பு கொள்க

இந்தத் தனியுரிமைக் கொள்கையைப் பற்றி ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகள் அல்லது Xiaomiயின் சேகரிப்பு, உபயோகம்அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்துதல் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், https://privacy.mi.com/support மூலமாக அல்லது கீழிருக்கும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். தனிப்பட்ட தகவல்களை அணுகல் அல்லது பதிவிறக்குதல் பற்றிய தனியுரிமை அல்லது தனிப்பட்ட தகவல் கோரிக்கைகளை நாங்கள் பெறும்போது, உங்கள் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு தொழில்முறை குழு எங்களிடம் உள்ளது. உங்கள் கேள்வியில் ஒரு குறிப்பிடத்தக்க சிக்கல் இருந்தால், நாங்கள் உங்களிடம் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம்.

உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்புடையதாக எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற மறுமொழியில் உங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை என்றால், உங்கள் சட்டவரம்பில் உள்ள தொடர்புடைய தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகார அமைப்புகளிடம் நீங்கள் புகாரளிக்கலாம். நீங்கள் எங்களை அணுகினால், உங்கள் உண்மையான சூழ்நிலைக்குப் பொருந்தக்கூடிய பொருத்தமான புகார் சேனல்களில் தகவல்களை வழங்குவோம்.

Xiaomi Communications Co., Ltd. #019, 9th Floor, Building 6, 33 Xi'erqi Middle Road, Haidian District, Beijing, China 100085

** Xiaomi Technologies Singapore Pte. Ltd.** 1 Fusionopolis Link #04-02/03 Nexus @One-North Singapore 138542

இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு:

Xiaomi Technology India Private Limited Building Orchid, Block E, Embassy Tech Village, Outer Ring Road, Devarabisanahalli, Bengaluru, Karnataka - 560103, India

அதிக முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட தரவு அல்லது தகவல்களைச் செயலாக்குவதுடன் தொடர்புடைய ஏதேனும் முறைகேடுகள் மற்றும் மனக்குறைகளை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதற்கென நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்:

பெயர்: விஷ்வநாத் சி

தொலைபேசி: 080 6885 6286, திங்கள்-சனி, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

மின்னஞ்சல்: grievance.officer@xiaomi.com

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) வசிக்கும் பயனர்களுக்கு:

Xiaomi Technology Netherlands B.V. Prinses Beatrixlaan 582, The Hague 2595BM Netherlands

எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்க நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி!

உங்களுக்கு புதிது என்ன?

பின்வருமாறு பல்வேறு வகையான புதுப்பிப்புகளை நாங்கள் செய்திருக்கிறோம்:

• எங்கள் தொடர்பு விவரங்களில் சிலவற்றை மாற்றியிருக்கிறோம்.

• எங்களாலும் மூன்றாம் தரப்பினராலும் சேகரிக்கப்படும் சில தகவல்களை நாங்கள் புதுப்பித்திருக்கிறோம்.

• தனிப்பட்ட முறையில் அடையாளங்காட்டாத தகவல்களை எவ்வாறு நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுத்து இருக்கிறோம்.

• உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி புதுப்பித்திருக்கிறோம், இதில் நீங்கள் புஷ் சேவைகளைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடையதாக எங்களுக்கு இருக்கும் சட்டப்பூர்வ நலன்களின் அடிப்படையில் தனிப்பட்ட தகவல்களை செயலாக்குவதைப் பற்றி இன்னும் விரிவாக விளக்கியிருப்பதும் உள்ளடங்கும்.

• தரவு தக்கவைத்தல் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கியிருக்கிறோம்.

• உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கான உங்கள் உரிமைகளைப் பற்றி இன்னும் தெளிவாக வரையறுத்திருக்கிறோம்.